பிக்பாஸில் இந்த வார பூகம்பம்..! உள்ளே வரும் வைல்ட் கார்ட்.. போட்டியாளர்களுக்கு செக்..!

by Akhilan |
பிக்பாஸில் இந்த வார பூகம்பம்..! உள்ளே வரும் வைல்ட் கார்ட்.. போட்டியாளர்களுக்கு செக்..!
X

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ன் காலை ப்ரோமோ வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. கிட்டத்தட்ட இத்தனை சீசன்களில் நடக்காத ஒரு புது விஷயம் நடக்கப்பட இருப்பதாக ரசிகர்களிடமும் பேச்சுகள் எழுந்து வருகிறது.

பிக்பாஸ் ஏழாவது சீசன் 50 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. டாஸ்க் மட்டும் இல்லை அவர்களின் மெண்டல் ஹெல்த்தை வச்சே டிஆர்பி பிடிப்போம் என்ற ரீதியில் தொடங்கப்பட்ட வாரத்தில் இருந்து பெரிய டாஸ்கள் எதுவுமே நடத்தப்படவில்லை.

இதையும் படிங்க: திரிஷாவுக்கு கிடைச்ச ஆதரவு இமானுக்கு இல்லையேப்பா!.. இளிச்சவாயானா ஈசியா அடிச்சுடலாமா?

இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் அதிரடியாக வீட்டுக்குள் 3 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைய இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் இன்னும் கூட்டம் ஏறுமே என நினைத்தால் அங்கு தான் வச்சிருக்காங்க ஒரு ட்விஸ்ட்.

அவங்க 3 பேர் டாஸ்க் மூலம் ஜெயிச்சு உள்ளே வந்தால் இருக்கும் 14 போட்டியாளர்களில் இருந்து 3 பேர் வெளியே செல்ல வேண்டும். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் அடித்து இருக்கிறது. எப்படி நடக்கும் யார் வரப்போகிறார்கள் என அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க: திரிஷாவை மட்டுமில்லை விஜய் முன்னாடியே அந்த நடிகையையும் மன்சூர் அலி கான் தப்பா தான் பேசினாரு!..

அதனால் புது போட்டியாளர்கள் வெல்வார்களா? இல்லை பழைய போட்டியாளர்களே நீடிப்பார்களா? ஜெயிச்சால் என்ன நடக்கும். எப்படி 3 பேர் வெளியேறுவார்கள் என ஒரு ஆர்வம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை பிக்பாஸ் டீம் எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story