பெரிய தனுஷை காலி செய்த குட்டி தனுஷ்!.. முதள் நாளே வசூலை அள்ளிய டிராகன்!..
Dragon Collection: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் இவரிடம் இருந்தது. சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசையில் ஒரு கதையை உருவாக்கி பலரிடமும் கதை சொன்னார். யாரும் அவரை நம்பவில்லை.
கோமாளி உருவான விதம்: ஒருவழியாக ஜெயம் ரவியை சந்தித்து கதை சொன்னார். கதை நன்றாக இருந்தாலும் ரவிக்கு பிரதீப் ரங்கநாதன் மீது நம்பிக்கை வரவில்லை. ‘நீ சொன்ன கதையில் ஒரு காட்சியை எடுத்து வந்து என்னிடம் காட்டு.. பிடித்திருந்தால் நடிக்கிறேன்’ என சொல்ல பிரதீப்பும் அப்படியே செய்தார். அது பிடித்திருந்ததால் அந்த கதையில் நடிக்க சம்மதித்தார் ரவி. அப்படி உருவான படம்தான் கோமாளி.
இந்த படம் ஹிட் அடிக்கவே பிரதீப் கவனிக்கப்பட்டார். ஆனால், அவரின் அடுத்த படம் உருவாக 3 வருடங்கள் ஆனது. லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. அதோடு, பிரதீப்பை பலரும் குட்டி தனுஷ் என சொன்னார்கள். இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படம் வெளியாகியுள்ளது.
டிராகன் டிரெய்லர்: டிரெய்லரில் சில காட்சிகளை பார்ப்பதற்கு டான் படம் போல இருந்தாலும் படம் வெளியான பின் யாருக்கும் அந்த எண்ணம் வரவில்லை. முதல் 20 நிமிடங்கள் வழக்கமான சினிமா போல போனாலும் அதன்பின் படம் முழுக்க எங்கேயும் படம் போரடிக்கவில்லை என பலரும் சொன்னார்கள். படம் வெளியான நேற்றே இப்படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கிடைத்தது.
டிராகன் ரிலீஸ்: எனவே, இந்த படம் ஹிட் என்பது நேற்றே உறுதியானது. பொறுப்பில்லாமல், படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கல்லூரி மாணவன் கல்லூரி வாழ்க்கைக்கு பின் என்ன ஆகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. மேலும், ஓ மை கடவுளே படத்தை போல இரண்டாவது வாய்ப்பு என்கிற கான்செப்டை வைத்து இப்படத்தை அஸ்வத் இயக்கியிருந்தார். இந்த படதில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
டிராகன் வசூல்: டிராகன் படம் நேற்று ஒரு நாளில் மட்டும் 6 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷ் தனது சகோதரி மகன் பவிஷை வைத்து இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் நேற்று டிராகனோடு போட்டி போட்டு வெளியானது. ஆனால், இந்த திரைப்படம் முதல் நாலில் 1.15 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே, இந்த படத்தை விட டிராகன் படமே அதிக வசூலை அள்ளப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது.