NEEK: தனுஷ் படம் சோலி முடிஞ்சுது,, 3 நாள் கலெக்ஷன் எவ்வளவுன்னு பாருங்க..!
தனுஷ் தயாரித்து இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. தனுஷ் இயக்கத்தில் இது 3வது படம். தனுஷ் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷோட அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகி உள்ளார்.
காதல் தோல்வி: அவருடன் இணைந்து மேத்யு தாமஸ், பிரியா வாரியர், அனிகா, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை என்னன்னா தான் கட்டிக்கிற பொண்ணுக்கிட்ட போய் தன்னோட தோல்வி அடைந்த காதலைப் பற்றிச் சொல்கிறான். அது மட்டும் அல்லாமல் காதலில் தோல்வி அடைந்ததும் அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள பார்க்கிறாள்.
பெரிய பலம்: அதே நேரம் அவனுக்கு தான் கட்டிக்காத பெண் இன்னொருவரை எப்படி கட்டுவது என அந்தத் திருமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்கிறான். அதன்பின் என்னென்ன சிக்கல் வருகிறது என்பதுதான் கதை. இன்றைய 2 கே கிட்ஸை மனசுல வச்சி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். அவரைப் போலவே இருக்கிறார் அவரது அக்கா மகன் பவிஷ். படத்தின் பெரிய பலமே அவர்தான். இந்தப் படத்தின் கேரக்டர்களுக்காக நடிகர்களை சிறப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார் தனுஷ்.
எதிர்பார்க்காதீங்க: இது ஜாலியான படம். வழக்கமான முக்கோண காதல் கதைதான். ரொம்ப எதிர்பார்க்காதீங்கன்னுதான் தனுஷ் சொல்றாரு. சும்மா ஜாலியா வாங்க. ஜாலியா படம் பார்த்துட்டுப் போங்க என்ற கான்செப்ட் தான்.
ரீ ரிக்கார்டிங்: பவிஷ் தனுஷை ஜெராக்ஸ் எடுத்ததுப் போல இருக்கிறார். தன் அக்கா மகன் என்றதும் தனுஷே படத்தில் நடிக்கவில்லையாம். அவன் வளரட்டும் என்ற பெருந்தன்மைதான் காரணமாம். அனிகாவும் மேனரிசத்தில் கலக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷின் ரீ ரிக்கார்டிங் அருமை. சரத்குமார், ஆடுகளம் நரேன், பிரியா வாரியர் நடிப்பு அருமை. படத்தில் இன்ஸ்டாகிராம் புகழ் ரம்யா ரங்கநாதனும் நடித்துள்ளார். படத்தின் 3நாள் கலெக்ஷன் என்னன்னு பாருங்க.
3நாள் கலெக்ஷன்: இந்திய அளவில் முதல் நாளில் 1.15 கோடியை வசூலித்துள்ளது. 2வது நாளில் 1.8கோடியும், 3வது நாளில் 1.36கோடியும் வசூலித்துள்ளது. மொத்தம் 4.31கோடி மட்டும் வசூல் ஆகியுள்ளது. விடுமுறை நாள்களிலேயே இவ்வளவுதான் கலெக்ஷன் என்றால் வார நாட்களில் எப்படி இருக்கும் என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். தனுஷ் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்களிடம் இருந்து விமர்சனம் வருகிறது.