டிராகனிடம் மண்ணை கவ்விய NEEK!.. முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?!.....

By :  Sankaran
Update:2025-02-22 07:07 IST

தனுஷ் தயாரித்து இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். நேற்று திரையரங்குகளில் வெளியானது. குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

NEEK: தனுஷ் இயக்கத்தில் இது 3வது படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போ அது வேணாம். தனுஷோட அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகி உள்ளார். அவருடன் இணைந்து மேத்யு தாமஸ், பிரியா வாரியர், அனிகா, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை என்னன்னா தான் கட்டிக்கிற பொண்ணுக்கிட்ட போய் தன்னோட தோல்வி அடைந்த காதலைப் பற்றிச் சொல்கிறான். அது மட்டும் அல்லாமல் காதலில் தோல்வி அடைந்ததும் அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள பார்க்கிறாள்.

கதை: அதே நேரம் அவனுக்கு தான் கட்டிக்காத பெண் இன்னொருவரை எப்படி கட்டுவது என அந்தத் திருமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்கிறான். அதன்பின் என்னென்ன சிக்கல் வருகிறது என்பதுதான் கதை.

இன்றைய 2 கே கிட்ஸை மனசுல வச்சி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். அவரைப் போலவே இருக்கிறார் அவரது அக்கா மகன் பவிஷ். படத்தின் பெரிய பலமே அவர்தான். இந்தப் படத்தின் கேரக்டர்களுக்காக நடிகர்களை சிறப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார் தனுஷ்.

கான்செப்ட்: இது ஜாலியான படம். 85 சதவீதம் இளைஞர்கள்தான் தியேட்டர்ல இருக்காங்க. வழக்கமான முக்கோண காதல் கதைதான். ரொம்ப எதிர்பார்க்காதீங்கன்னுதான் தனுஷ் சொல்றாரு. சும்மா ஜாலியா வாங்க. ஜாலியா படம் பார்த்துட்டுப் போங்க என்ற கான்செப்ட் தான். படத்துல எல்லாருக்கிட்டேயும் அருமையா வேலை வாங்கிருக்காரு தனுஷ்.


பெருந்தன்மை: பவிஷ் தனுஷை ஜெராக்ஸ் எடுத்ததுப் போல இருக்கிறார். தன் அக்கா மகன் என்றதும் தனுஷே படத்தில் நடிக்கவில்லையாம். அவன் வளரட்டும் என்ற பெருந்தன்மைதான் காரணமாம். அனிகாவும் மேனரிசத்தில் கலக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷின் ரீ ரிக்கார்டிங் அருமை.

வசூல்: சரத்குமார், ஆடுகளம் நரேன், பிரியா வாரியர் நடிப்பு அருமை. படத்தில் இன்ஸ்டாகிராம் புகழ் ரம்யா ரங்கநாதனும் நடித்துள்ளார். படத்தின் முதல் நாள் கலெக்ஷன் என்னன்னு பாருங்க. முன்கூட்டியே கணக்கெடுத்த ரிப்போர்ட் வந்துள்ளது. இதன்படி நேற்று முதல் நாளில் இந்திய அளவில் ரூ.1.15 கோடியை வசூலித்துள்ளது.

இந்தப் படம் காதலர் தினத்திற்கு வந்தால் நல்ல கலெக்ஷன் இருந்து இருக்கும். அன்றைய தினம் 6 படங்கள் வந்ததால் ஒரு வாரம் கழித்து ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான டிராகன் முதல் நாளில் 6 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News