6வது நாளிலும் அதே வசூல்!. கல்லா கட்டுமா விடாமுயற்சி?!. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!...

By :  Murugan
Update:2025-02-12 10:18 IST

Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி வெளியானது. அஜித்தின் படம் வெளியாகி 2 வருடம் ஆகிவிட்டதால் இந்த படத்தை காண அஜித்தின் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். தடையற தாக்க, மிகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியானது. ஆனால், கதையில் சில மாற்றங்களை செய்துவிட்டனர். அசர்பைசான் நாட்டுக்கு சுற்றுலா போகும் போது மனைவி திரிஷா காணாமல் போக அவரை அஜித் தேடி அலையும் கதை.

இந்த படத்தில் வழக்கமான அஜித் படங்களில் வரும் மாஸான காட்சிகள் எதுவும் இல்லை. ஒரு ஆணிடமிருந்து பிரிய நினைக்கும் பெண்ணின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்களை பார்ப்பார்கள். ஆனால், கூஸ்பம்ப்ஸ் காட்சிகளை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போய்விட்டது.


எனவே, படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனம் வசூலை பாதித்தது. மேலும், இப்படம் 15 வயதுக்கு மேற்பட்டவர்களே பார்க்க முடியும் என சென்சார் போர்டு சொல்லிவிட்டதால் வெளிநாடுகளில் பலரும் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாடுகளில் வசூல் கடுமையாக பாதித்திருக்கிறது.

முதல் நாள் இப்படம் 26 கோடியை வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாள் 10.25 கோடியும், 3ம் நாள் 13.5 கோடியும், 4ம் நாள் 12.5 கோடியும், 5ம் நாள் 3.15 கோடியும் வசூல் செய்தது. அதேபோல், 6ம் நாளான நேற்றும் 3.15 கோடியே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் படம் வெளியாகி 6 நாட்களில் விடாமுயற்சி படம் 68.55 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வசூல் இந்தியாவில் மட்டுமே. சிலரோ இப்படம் இந்தியாவில் 78.05 கோடி வசூல் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், வெளிநாடுகளில் 35.2 கோடி வசூல் என பார்க்கும்போது உலகம் முழுவதும் சேர்த்து விடாமுயற்சி படம் 6 நாட்களில் 113.25 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட் எப்படியும் 200 கோடி இருக்கும் என்பதால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம்.

Tags:    

Similar News