உசுரே நீதானே!.. மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறேன்!.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!..
ரோஜா திரைப்படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். 90களில் இவர் கொடுத்த துள்ளலான பாடல்கள் இசையுலகில் பெரிய புரட்சியையே செய்தது. குறிப்பாக இளசுகள் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களாக மாறினார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார். தேசிய விருது, கிராமிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை வாங்கியிருக்கும் இசையமைப்பாளர் இவர்.
இசையமைப்பாளராக இருந்த ரஹ்மான் இப்போது ‘லி மஸ்க்’ என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறியிருக்கிறார். விர்ட்டியுவல் ரியாலிட்டி என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான் . இந்த படத்தை புரமோஷன் செய்யும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் Behindwoods யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். 13 வயதில் இருந்தே சினிமாவில் இருக்கிறேன். சினிமா திரையை பல வருடங்களாக பார்த்து வருகிறேன். சினிமா ஒரே மாதிரி இருக்கிறதே. புதிதாக எதையாவது முயற்சி செய்யலாமே என தோன்றியது.
அப்போதுதான் விர்ட்டியுவல் ரியாலிட்டி பற்றி தெரிந்துகொண்டேன். என் முன்னாள் மனைவி சாய்ரா ஒரு கதை சொன்னார். ஒரு சின்ன பெண்ணின் அப்பா, அம்மாவை சிலர் கொலை செய்துவிட வாசனையை வைத்த யார் கொலை செய்தார் என்பதை அந்த பெண் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. தியேட்டர் அனுபவம் இருந்தாலும் ஆக்டிங் ஒர்க் ஷாப், ரைட்டிங் ஒர்க் ஷாப் என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டேன். ‘நீங்களே படத்தை இயக்குங்கள்’ என நண்பர்கள் நம்பிக்கை கொடுத்ததால் நானே இயக்கிவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.
அபோது ஆங்கர் டிடி ‘மன்னிப்பாயா.. மன்னிப்பாயா’ பாடல் பற்றி பேச ‘நான்தான் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். என் குடும்பம், மகன், மகள் மற்றும் குறிப்பாக என் முன்னாள் மனைவியிடமும் மன்னிபு கேட்க வேண்டும். ஏனெனில், இசை இசை என அவர்களுடன் அதிக நேரம் செலவிடாமல் இருந்துவிட்டேன்’ என மனம் திறந்து பேசியிருக்கிறார். இதை கருத்தைத்தான் பவதாரிணி இறந்தபோது இளையராஜாவும் சொன்னது குறிப்பிடத்தக்கது.