மகனுடன் செம வைப் பண்ணும் சிவகார்த்திகேயன்!.. அவரே வெளியிட்ட போட்டோஸ்!...

By :  MURUGAN
Published On 2025-07-12 16:35 IST   |   Updated On 2025-07-12 16:35:00 IST

Sivkarthikeyan: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கராக தனது கெரியரை துவங்கியவர் அப்படியே சினிமாவில் நுழைந்தார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். எதிர் நீச்சல், மனம் கொத்திப்பறவை, மெரினா போன்ற படங்களில் நடித்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

மிகவும் குறைவான காலகட்டத்தில் இவரின் சீனியர் நடிகர்களான தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களையும் ஓவர் டேக் செய்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். இவரின் வளர்ச்சி பல நடிகர்களுக்கும் பொறாமையை கொடுத்தது. இதை அஜித்தே அவரிடம் நேரில் சொல்லியிருக்கிறார்.


சினிமாவில் வெற்றி வந்ததுமே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதில் பல கோடிகள் நஷ்டமடைந்த பல படங்களில் தன்னுடைய சம்பளத்தில் இருந்து கொடுத்து அதை கழித்தார். காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு அமரன் எனும் சீரியஸான கதை கிடைத்தது. ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் சூப்பர ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்துவிட்டது.


இந்த படத்திற்கு பின் பெரிய இயக்குனர்களின் நடிப்பது என முடிவெடுத்த சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என நடிக்க துவங்கினார். இந்த 2 படங்களும் விரைவில் முடிவடையவுள்ளது. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.


விஜய் டிவியில் வேலை செய்யும்போதே உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராதனா என்கிற ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு குகன் என்கிற ஆண் மகன் பிறந்தான். மேலும், அடுத்து ஒரு மகனும் பிறந்தான். இந்நிலையில், மகன் குகனுடன் ஜாலியாக விளையாடும் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News