பாபாவுக்கு வந்த அதே நிலைமை!.. ரஜினி மாதிரி நஷ்ட ஈடு கொடுப்பாரா கமல்?!.. தக் லைப் பரிதாபம்!...
Thug Life: மணிரத்னம் இயக்கம், கமல், சிம்பு, திரிஷா போன்ற பிரபல நடிகர், நடிகைகள், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என பெரிய விஷயங்கள் இருந்தும் தக் லைப் படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே, படம் வெளீயாகி ஒரு வாரத்திலேயே தியேட்டரில் காத்து வாங்கியது.
கமலின் விக்ரம் படம் ஒரு வாரத்தில் 168 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தக் லைப் படம் தமிழகத்தில் 42 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இப்படத்தை இயக்கி கொடுத்திருந்தார் மணிரத்னம். கமல் சொன்ன கதையை கொஞ்சம் மாற்றி இயக்கிருந்தார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.
இப்படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் அதிபர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, படத்தை வினியோகம் செய்த ரெட் ஜெயண்ட் மற்றும் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் ஆகியவற்றிடம் நஷ்ட ஈடு கேட்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
நடிகர் ரஜினி சொந்தமாக கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரசிகர்களை கவராமல் தோவ்வி அடைந்தபோது படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்டனர். அவரும் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார். இப்போது இதே நிலைமை தக் லைப் படத்தால் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் இப்படத்தின் ஓடிடி உரிமை 130 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால், படத்தின் தோல்வியால் ஓட்டி நிறுவனம் சொன்ன விலையிலிருந்து 25 சதவீதம் வரை குறைத்தே கொடுப்பார்கள் என செய்திகள் கசிந்திருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்களிலேயே பாதி தியேட்டர்களிலிருந்து படத்தை தூக்கிவிட்டனர். தியேட்டர் அதிபர்களுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும், கமலும் நஷ்ட ஈடு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.