டிக்டாக் இலக்கியா தற்கொலை முயற்சியா?!.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!...

By :  MURUGAN
Published On 2025-07-25 14:38 IST   |   Updated On 2025-07-25 14:38:00 IST

Tiktok Elakkiya: டிக்டாக் ஆப் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. டிக்டாக் ஆப்பில் தொடர்ந்து கவர்ச்சியாகவும், தனது முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்தும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர் கூட்டத்தை கெடுத்து வருபவர் இவர்.

டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டபின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும், யுடியூப்பில் சமையல் தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் சமையலை பார்ப்பவர்களை விட இவரின் கவர்ச்சியை ரசிக்கவே பலரும் அவரின் யுடியூப் சேனலை பார்க்கிறார்கள்.

இந்நிலையில், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு அதில் மயக்கமடைந்த இலக்கியா இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டிருக்கிறார். தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அவர் தற்கொலைக்கு முயன்றாரா என விசாரித்து வருகின்றனர். பிரபல சண்டைக் காட்சி இயக்குனருடன் இலக்கியாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், ஆனால், அவர் ஏமாற்றிவிட்டதோடு, இலக்கியாவை அடித்து துன்புறுத்துவதால் இலக்கியா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என செய்திகள் கசிந்து வருகிறது. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News