சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கழுத்தில் அன்புவின் தாலி..!? கோகிலா திருமணம் நடந்ததா?

By :  SANKARAN
Published On 2025-07-25 22:03 IST   |   Updated On 2025-07-25 22:03:00 IST

சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்.

அன்பு சுயம்புவை அடித்து உதைக்கிறான். கோகிலாவின் கட்டை அவிழ்த்து விட்டு ஆனந்தி, அன்பு மூவரும் வீட்டுக்கு வேகமாகக் கிளம்புகிறார்கள். அங்கு லலிதா அன்புவை எங்கேன்னு தேடி வருகிறார். அதே நேரம் மாப்பிள்ளையை எழுப்பி விட்டதும் அவரது அம்மா கோகிலாவின் அம்மாவைப் பார்க்க வருகிறாள். அவளிடம் என் பையனை இப்பத்தான் எழுப்பி விட்டேன்.

கோகிலா எழுந்துட்டாளான்னு கேட்கிறாள். கோகிலாவும், ஆனந்தியும் எழுந்திருச்சிருப்பாங்க. வாங்க போய் பார்க்கலாம்னு அவங்க ரூமுக்குப் போறாங்க. அங்கேயே ரெஜினாவும், சௌந்தர்யாவும் இன்னும் ஆனந்தியும், கோகிலாவும் வரலயே. நாம என்னத்தைச் சொல்லி சமாளிக்கிறதுன்ன பரிதவிக்கிறார்கள்.

அப்போது ஆனந்தி போன் பண்ணி யாராவது வந்தார்களான்னு கேட்கிறாள். முதல்ல ஒரு தடவை வந்தாங்க. நான் அங்கே இங்கேன்னு சொல்லி உள்ளேயே அவங்களை விடாம சமாளித்து அனுப்பிட்டேன்னு ரெஜினா சொல்கிறாள். இப்ப விடிகிற நேரம். வந்துருவாங்க. கேட்டா நான் கீழே போயிருக்கேன். அக்கா குளிக்கிறான்னு சொல்லி சமாளி. சௌந்தர்யாவை பாத்ரூமுக்கு அனுப்பி குளிக்க வை என்று ஆனந்தி ரெஜினாவுக்கு ஐடியா கொடுக்கிறாள்.



அதே போல ஆனந்தியின் அம்மா வரும்போது ரெஜினா சமாளிக்கிறாள். ஆனந்தியை எங்கேன்னு கேட்டதுக்கு அன்புவின் அம்மாவுக்குக் காபி போட்டுக் கொடுக்க கிச்சன் போயிருக்கான்னு சொல்லி சமாளிக்கிறாள். கோகிலாவுக்கு முதல் பூ வைக்கணும்னு மாப்பிள்ளையின் அம்மா அந்த ரூமில் வந்து உட்கார்ந்து கொள்கிறாள்.

அந்த நேரம் பார்த்து கீழே ஆனந்தியின் அம்மா வந்து அங்கும் இங்குமாக தேடி வருகிறாள். அதே நேரம் அன்புவின் அம்மா அங்கு வர இருவரும் சந்திக்கின்றனர். ஆனந்தியை எங்கேன்னு கேட்க ரெஜினா கிச்சன் போயிருக்குறதா சொல்லி சமாளிக்கிறாள். கடைசியாக துளசி வந்து அவர்களுக்கு உதவி செய்து பிரச்சனையை சுமூகமாக்கி விடுகிறாள்.

பொழுது விடிந்தது. கோகிலாவுக்கு வாணியும், ஆனந்தியும் அலங்காரம் செய்கிறார்கள். மாப்பிள்ளை தயாராகிறார். அன்பு அவரிடம் நீங்க தான் கோகிலா கழுத்துல தாலியைக் கட்டப் போறீங்க. அவசரப்படாதீங்கன்னு சொல்கிறான். அடுத்து ஆனந்தியின் கழுத்தில் கட்டப்போகும் தாலியை எடுத்துப் பார்க்கிறான். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். 

Tags:    

Similar News