1000 ஆம்பளைங்களுக்கு மத்தியில் சுருதி மட்டும்! லோகேஷ் சொன்ன சூப்பர் தகவல்

By :  ROHINI
Published On 2025-07-26 14:29 IST   |   Updated On 2025-07-26 14:29:00 IST

coolie

ரஜினிகாந்த் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதுவரை எத்தனையோ மல்டி ஸ்டார் படங்களை பார்த்திருப்போம். ஆனால் கூலி படத்தை பொருத்தவரைக்கும் எல்லா மொழிகளிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதுவே இந்தப் படத்திற்கு பெரிய ஹைப்பாக இருக்கிறது. எப்படியும் கூலி படம் வசூலிலும் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படம் ரிலீஸாக இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளை படத்தின் இயக்குனர் லோகேஷ் ஆரம்பித்துவிட்டார். இன்னும் ஒரு சில நாள்களில் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய செய்தியும் வெளியாகி விடும்.

இந்த நிலையில் லோகேஷ் கூலி படத்தை பற்றி பல விஷயங்களை ஒரு தனியார் யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், சுருதிஹாசன் , அமீர்கான், உபேந்திரா என பல நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் ஒரு சோலோ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். மோனிகா என தொடங்கும் அந்தப் பாடல் சமீபத்தில் ரிலீஸாகி மிகவும் டிரெண்டிங்காகியிருக்கின்றன.

படத்தில் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்பட்டது. இதை பற்றி லோகேஷ் கூறிய போது படத்தில் ஒரு அற்புதமான கேமியோவாக அமீர்கானின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் அவருடைய பிரசன்ஸ் படமுழுக்க இருக்கும் மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சுருதிஹாசன் கேரக்டரை பற்றி கூறும் போதும் அவருடைய கதாபாத்திரம் மிக வலிமையானது என்று லோகேஷ் தெரிவித்தார்.

sruthi

எப்பொழுதுமே செட்டில் 1000 ஆண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெண் கேரக்டர் சுருதி மட்டும்தான். படமுழுக்க ஒரு கேங்ஸ்டராக இருக்கும் போது ஒரே ஒரு பெண். அது ஒரு பயங்கரமான அனுபவமாக சுருதிஹாசனுக்கு இருந்திருக்கும் என லோகேஷ் கூறியிருக்கிறார். படத்தில் சத்யராஜின் மகளாக சுருதிஹாசன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News