Singappenne: ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டிய அன்பு? சுயம்புவுக்குத் தெரிந்த அந்த விஷயம்!

By :  SANKARAN
Published On 2025-07-26 22:40 IST   |   Updated On 2025-07-26 22:43:00 IST

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் படுசூட்டிப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் நடந்த கதைச்சுருக்கம் இதுதான்.

ஆனந்தியின் அக்கா கோகிலாவின் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. அதே நேரம் பல்வேறு குழப்பங்களும் அரங்கேறி வருகின்றன. இடையிடையே டுவிஸ்ட்டுக்கு மேல டுவிஸ்டாகத் தான் போகுது. சுயம்புவை அடித்துத் துவைத்து கோகிலாவையும், ஆனந்தியையும் அன்பு மீட்டு வருகிறான். அதற்குள் இருவரையும் காணாமல் கல்யாண வீடு கலவரப்படுது.

அதையும் துளசியும், ரெஜினாவும், சௌந்தர்யாவும் சமாளித்து விடுகிறார்கள். அன்புவின் அம்மாவோ ஆனந்தியின் அம்மாவிடம் பொண்ணு கேட்பதற்காக முயற்சிக்கிறாள். ஆனால் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது. அதற்குள் கல்யாண மண்டபத்தில் வைத்தே மாப்பிள்ளை வீட்டாரில் சம்பந்தியின் தம்பி ஆனந்தி தான் தன் வீட்டு மருமகள் என பேசி விட வேண்டியதுதான்னு முடிவெடுக்கிறார்கள்.

இதற்கிடையில் அடி வாங்கிய சுயம்பு அன் கோவிற்கு வைத்தியர் வைத்தியம் பார்க்கிறார். எத்தனை பேரு அடிச்சாங்கன்னு கேட்கிறார். என்னையாவது? அடிக்கிறதாவது? வழுக்கி விழுந்துட்டேன்னு சமாளிக்கிறான் சுயம்பு.

இது மகாநதி படத்துல வர்ற காமெடி மாதிரில்ல இருக்குன்னு கோட்டைச்சாமி சிரிக்கிறான். அதுதான் அவரு பஞ்சாயத்து தலைவரா இருக்காரு. நாம அப்படியே இருக்குறோம்னு சேகர் சுயம்புக்கு இசை பாடுகிறான். அதே நேரம் இந்த வைத்தியம் மாலை வரை செய்யணும். அப்போ தான் குணமாகும். நானே அழகப்பன் வீட்டு கல்யாணத்துக்குப் போக வேண்டியது. ஆனால் எனது வைத்தியத்துக்காகப் போகாமல் இங்கே இருக்கிறேன் என்கிறார்.


வைத்தியரிடம் சுயம்பு அந்தக் கல்யாணத்தை நான் தான் தடுத்து நிறுத்தப் போறேன். ஆனந்திக்குத் தாலி கட்டப் போறேன் என்கிறான். அது மகாபாவம்னு வைத்தியர் சொல்றாரு. அதே நேரம் வயித்துல புள்ளத்தாச்சிக்காரி ஆனந்தி. அவ கழுத்துலயா தாலி கட்டப் போறேன்னு சொல்கிறார்.

அதே நேரம் அன்பு தாலியுடன் தான் தயாராக இருப்பதாகவும் கோகிலா கழுத்தில் தாலி ஏறியதும் நான் ஆனந்திக்கு கட்டாயத் தாலி கட்டப்போகிறேன் என்று முத்துவிடம் சொல்கிறான். ஆவனும் முதலில் அதிர்ச்சி அடைந்து பிறகு அதற்கு உறுதுணையா இருக்கேன் என்கிறான். கோகிலா கல்யாணம் நடந்ததா? சுயம்பு வந்தானா? ஆனந்தி கழுத்தில் அன்பு தாலியைக் கட்டினானா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். 

Tags:    

Similar News