பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கும் தேதி கசிந்தது… இந்த முறை தொகுப்பாளர் இவர்தானா?
Biggboss Tamil9: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் மிகப்பெரிய புகழ் பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 9 குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கசிந்துள்ளது.
100 நாட்கள் ஒரே வீட்டில் 16க்கும் அதிகமான பிரபலங்கள் தங்கி இருக்க வேண்டும். எந்த வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 60க்கும் அதிகமான கேமராக்கள் உலா வர தாக்கு பிடிக்கும் போட்டியாளர் வெற்றி மகுடத்தை சூட்டி 50 லட்சம் பரிசை பெறுவார்கள்.
இந்தியில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியானது. அப்படி தமிழின் முதல் சீசன் பிக்பாஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஓவியா தற்கொலை முயற்சி செய்து பாதியிலேயே வெளியேறினார்.
அடுத்தடுத்த சீசன்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றியாளர்கள் முதல் சில வாரங்களிலேயே முடிவாகி விட்டனர். அந்த வகையில் ராஜூ, ஆரி, அசீம் உள்ளிட்டோர் தங்களுடைய சீசன்களில் வெற்றி பெற்றனர்.
முதல் 7 சீசன்களையுமே பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் 7வது சீசனில் பிரதீப் ஆண்டனியை பாதியிலேயே வெளியேற்றினார். இதனால் அவருக்கு ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்தது. இதையடுத்து அவர் 8வது சீசனை தொகுத்து வழங்குவதில் இருந்து பின் வாங்கினார்.
அவருக்கு பதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி உள்ளே வந்தார். முதலில் பாலிலே சிக்ஸர் என்ற ரீதியில் போட்டியாளர்களை கேள்வியால் துளைத்து எடுத்து கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்து இருந்தார். முதலில் அதை ரசிகர்கள் ஆதரித்தாலும் பின்னர் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது 9வது சீசன் பிக்பாஸ் தமிழையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் எப்போதும் துவங்கும் பிக்பாஸ் தமிழ் தற்போது செப்டம்பரிலேயே துவங்க இருக்கின்றனராம். இதற்கான போட்டியாளர் தேர்வும் துவங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.