கைதி2க்கு பின் என்னுடைய ஹீரோ இவர்தான்… அதிரடியாக சொன்ன லோகேஷ் கனகராஜ்… வெவரமா இருக்காருப்பா!

By :  AKHILAN
Published On 2025-07-26 15:07 IST   |   Updated On 2025-07-26 15:07:00 IST

Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் ஹீரோ குறித்து அவர் பேசி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

மாநகரம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து அவர் கார்த்திக் சிவகுமார் நடிப்பில் கைதி படத்தினை இயக்கினார். அப்படம் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்பார்ப்பு கிடைக்க முன்னணி ஹீரோக்களிடம் இவருக்கு டிமாண்ட் அதிகரித்தது.

அந்த வகையில், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தினை இயக்கி சூப்பர்ஹிட் அடித்தார். அதையடுத்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி வெற்றி கண்டார். தொடர்ந்து விஜய், திரிஷா நடிப்பில் லியோ படத்தினை இயக்கி மாஸ் ஹிட் கொடுத்திருந்தார்.

இதையடுத்து, கூலி படத்தினை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. இதுவரை வெளியான எல்லா படங்களுமே எல்சியூ கனெக்‌ஷனில் வெளியாக இந்த படம் தனி படமாகவே வெளியிடப்பட வேண்டும் என ரஜினிகாந்த் கண்டிஷனுடன் தான் இப்படம் தொடங்கப்பட்டது.

ரஜினிகாந்த் உடன் அமீர்கான், பாலையா, உபேந்திரா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடிக்கின்றனர். மேலும் சத்யராஜ், ஷொபீர் ஷாபின், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கடைசிக்கட்டத்தை எட்டி விட்டது. 

 வரும் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் தன்னுடைய அடுத்த படமாக கைதி 2வை இயக்க இருக்கிறார். அப்படம் முடிந்ததோடு ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தினை இயக்க இருக்கிறாராம்.

இப்படத்தின் பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது. கூலி படத்தின் இரண்டாம் பாகமாக அப்படம் இருக்காது என்றும் புதிய கதையில் இப்படத்தினை தயார் செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். விரைவில் இதற்கான அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News