அதை கொடுத்தா கருப்பு படத்தை வாங்குறோம்!. தீபாவளி ரிலீஸ் தேதிக்கு வந்த சிக்கல்!..
Karuppu: ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம்தான் கருப்பு. கடந்த சில வருடங்களாக வேறு மாதிரியான படங்களில் நடித்து வந்த சூர்யாவுக்கு கருப்பு படம் ஒரு பக்கா கமர்ஷியல் மசாலா படமாக அமைந்திருக்கிறது. இது இப்படத்தின் டீசர் வீடியோவை பார்த்தாலே இது புரிகிறது.
அதோடு, மக்களிடம் வரவேற்பை பெறும் சாமி கதாபாத்திரத்தையும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் வைத்திருப்பதால் படம் கண்டிப்பாக பி,சி செண்டர்களிலும் ஹிட் அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார். வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு இன்னும் அதை உறுதி செய்யவில்லை.
கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. டீசர் வீடியோ வெளியாகும்போது அதில் ரிலீஸ் தேதியை சொல்வார்கள் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. அதன்பின் பின்னரே கருப்பு படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் சரி, அந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. அவர்கள் எப்போது படத்தை ரிலீஸ் செய்ய சொல்கிறார்களோ அந்த தேதியில் படத்தை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்கிறார்கள். ஏனெனில், தியேட்டர் வசூல் இல்லாமல் ஒடிடியில் பல கோடிகள் வருமானமாக கிடைக்கிறது.
கருப்பு படத்தை பொறுத்தவரை நெட்பிலிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டாலும், கைதி 2 படத்தையும் சேர்த்து கொடுத்தால் நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என சொல்கிறார்களாம். ஏனெனில் இந்த 2 படங்களுக்கும் தயாரிப்பாளர் ஒன்றுதான். ஆனால், கைதி 2-வின் பட்ஜெட்டே என்னவென்று தெரியாத நிலையில் என்ன விலைக்கு கைதி 2-வை கொடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறதாம். அதனால்தான் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை இதுவரை சொல்லாமல் இருக்கிறார்கள்.
கைதி 2 படத்தை லோகேஷ் இயக்க கார்த்திக் நடிக்கவிருக்கிறார். அனேகமாக கூலி படம் ரிலிஸான பின் இந்த படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.