கிங்காங் மகள் திருமணத்தில் வடிவேலு, எஸ்.கே பண்ணது டிராமா!.. பொளக்கும் பிரபலம்!...
Kingkong: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேல் காமெடி காட்சிகளில் நடித்து வருபவர் கிங்காங். சினிமாவில் ஷூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய குழுவை வைத்து பல ஊர்களிலும் கலை நிகழ்ச்சி நடத்துவார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில், மூத்த மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனது மகள் திருமணத்தில் பெரியவர்கள் எல்லோரும் வந்து வாழ்த்த வேண்டும் என ஆசைப்பட்ட கிங் காங் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலருக்கும் வைத்திருந்தார்.
நடிகர் சங்கத்திற்கு போய் விஷால், கார்த்தி, மன்சூர் அலிகான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகிபாபு, லதா ரஜினிகாந்த் என பலருக்கும் பத்திரிக்கை வைத்தார். அப்படியே தமிழக முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்த் பிரேமலதா, அன்புமணி ராமதாஸ், தமிழிசை சவுந்தர்ராஜன் என பலருக்கும் பத்திரிக்கை கொடுத்தார். அதோடு, யாருக்கெல்லாம் பத்திரிக்கை வைத்தாரே அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து டிரெண்டிங் செய்தார்.
ஆனால், திருண வரவேற்பு நடந்தபோது நாசர், விஷால் மற்றும் சின்ன சின்ன காமெடி நடிகர்களை தவிர யாரும் போகவில்லை. அரசியலில் அன்புமணி ராமதாஸை தவிர மற்றவர்கள் போனார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று மணமக்களை வாழ்த்தி சென்றது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. கிங்காங் வடிவேலுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், பத்திரிக்கை வைத்தும் அவர் போகவில்லை. ஆனால், அவர் கிங்காங்கிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானது. அதேபோல், திருமணத்திற்கு நேரில் போகாத சிவகார்த்திகேயன் சமீபத்தில் கிங்காங்கின் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் பாலாஜி பிரபு வடிவேல், சிவகார்த்திகேயன் இருவரும் செய்தது டிராமா என பேசியிருக்கிறார்.
கிங்காங்கிற்கு பல படங்களில் வடிவேலு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு அன்பளிப்பாக ஒரு லட்சம் பணம் கொடுத்திருக்கிறார். அதையெல்லாம் பாராட்டலாம். ஆனால், திருமணம் நடந்தபோது வடிவேலு மதுரையில்தான் இருந்தார். அவர் நினைத்திருந்தால் நேரில் போய் வாழ்த்தியிருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால் கிங்காங் குடும்பம் சந்தோஷப்பட்டிருக்கும். அதைவிட்டு போனில் சப்பை கட்டு கட்டுகிறார்.
அதேபோல், கிங்காங்கின் மகள் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை. சிவகார்த்திகேயனும் திருமணத்திற்கு செல்லாமல் வீட்டுக்கு போகிறார். எல்லாமே டிராமாதான். இதுவே அம்பானி வீட்டு திருமணம் என்றால் எல்லோரும் போயிருப்பார்கள். அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி ஆடிய வீடியோவெல்லாம் வந்தது. ஆனால், கிங்காங் வீட்டுக்கு போய் பத்திரிக்கை வைத்தும் அவர் செல்லவில்லை. இவர்களுக்கு கிங் காங் சின்ன நடிகர். எனவே, போகமாட்டார்கள். கிங்காங் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்தும் போகாததால் சமூகவலைத்தளங்களில் பலரும் நடிகர்களை திட்டினார்கள். இதனால்தான் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு போனார்’ என பேசியிருக்கிறார்.