வெற்றிமாறனிடம் வசமா சிக்கிட்டாரே சிம்பு!. புரமோ ஷூட்டையே படம் மாதிரி எடுக்குறாரே!..
Vetrimaran simbu: ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இதுதான் எடுக்கப்போகிறோம் என சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அதை எப்படியே எடுப்பது பெரும்பாலானவர்கள் செய்வது. சிலரோ, மனதிற்குள் ஒன்று தோன்றும். ஷூட்டிங் போன பின் வேறு ஒன்று தோன்றும். அதை எடுத்த பின் வேறு தோன்றும். இயக்குனர் வெற்றிமாறன் இதில் இரண்டாம் வகை.
விடுதலை படத்தை இப்படித்தான் ஒரு வருடத்திற்கும் மேல் எடுத்தார். விஜய் சேதுபதியிடம் அவர் கேட்டது வெறும் 8 நாள் கால்ஷீட்தான். ஆனால், படம் எடுக்க எடுக்க வெற்றிமாறனுகு புதுப்புது ஐடியா வந்து கொண்டே இருக்க விஜய் சேதுபதி பல நாட்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டியதாயிற்று.
பல காட்சிகளை வெற்றிமாறன் எடுக்க அவைகள் இரண்டாம் பாகமாக வெளிவந்தது. முதல் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களுக்காவும் 3 வருடங்கள் நடித்தார் சூரி. ஆனாலும், அது வீண் போகவில்லை. விடுதலை படத்திற்கு பின் பல படங்களிலும் அவர் ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார்.
விடுதலை 2-வுக்கு பின் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வாடிவாசலின் கதையை வெற்றிமாறன் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை. முழு ஸ்கிரிப்ட் இருந்தால் மட்டுமே ஷூட்டிங் என சூர்யா சொல்லிவிட சிம்புவை வைத்து வட சென்னையை பின்னணியாக கொண்டு படத்தை துவங்கினார் வெற்றிமாறன்.
இந்த படத்தின் புரமோ ஷுட் 2 வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால், 2 வாரங்கள் தாண்டியும் அதை இன்னமும் வெற்றிமாறன் எடுத்து முடிக்கவில்லை. இந்த படத்தில் சிம்புவுக்கு இரண்டு கெட்டப் என்பதால் இரண்டு கெட்டப்பிலும் புரமோ ஷூட்டை எடுத்தார் வெற்றிமாறன்.
இப்போது இளமையான சிம்புவை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் எனக்கு திருப்தி இல்லை. அதை மீண்டும் எடுப்போம் என சொல்லி அதிர வைத்திருக்கிறாராம் வெற்றி. இப்படியே போனால் சிம்பு இப்படத்திலிருந்து வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறார்கள்..