பாரதிராஜாவை இயக்குனர் இமயம்னு சொல்றாங்களே... ஏன்னு தெரியுமா?

By :  SANKARAN
Published On 2025-07-10 19:09 IST   |   Updated On 2025-07-10 19:09:00 IST

தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவை இயக்குனர் இமயம்னு சொல்வாங்க. அதுக்கு என்ன காரணம்னு பார்க்கலாமா...

பாரதிராஜா கேமராவை நகரத்துல இருந்து எளிய மக்கள் முன்னால எடுத்துட்டுப் போனார். அவர் கிராமத்து வாழ்க்கையை அசராம எடுத்திருப்பாரு. அதுல சமரசம் பண்ண மாட்டாரு. அவருடைய படத்துல ஹீரோன்னு பெரிசா பார்க்க முடியாது. ஒண்ணு ரெண்டு படங்கள் தவிர. டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள், கேப்டன் மகள், கொடி பறக்குதுன்னு சில படங்களில் தான் ஹீரோவைப் பெரிசாகப் பார்க்க முடியும்.

இந்தப் படங்கள் நகரத்தை நோக்கிப் பண்ணியவை. இது கிராமத்துப் படங்கள் மட்டும் தான் நான் பண்ணுவேன்னு கிடையாது. நகரத்துப் படங்களும் இயக்கத் தெரியும் என்பதற்காக எடுத்தவை. அதிலும் கிராமத்துப் படங்களில் அவர் பட்டையைக் கிளப்பியவர். பாரதிராஜா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்தவர்.

16 வயதினிலே படத்துக்கு ஆரம்பத்தில் மயிலுன்னு தான் வைக்கலாம்னு நினைத்தாராம். கமல் ஹீரோ என்றாலும் ஸ்ரீதேவிக்குத் தான் முக்கியம். கமல் ரெண்டாவது ஹீரோ தான். அதே போல கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவுக்குத் தான் முக்கியம். பெண்களுக்கு எதிரான பிரச்சனை மற்றும்மூடத்தனத்தை வெகு அழகாகச் சொல்லி இருப்பார்.


கிழக்குச்சீமையிலே படத்தில் முழுக்க முழுக்க ராதிகாவை மையப்படுத்தி எடுத்த படம். பசும்பொன் படத்தை எடுத்துக்கிட்டா அது பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சொன்ன படம். பெண்களுக்கான மறுமணம் தான் முற்போக்குன்னு சொன்னாங்க. கருத்தம்மா படம் பெண்குழந்தைக்கு எதிரான கொடுமையை ஆணித்தரமாக சொன்னது. இதுல ராஜஸ்ரீதான் கதாநாயகி. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News