ப்ரீடம் ரிலீஸ் ஆகாத காரணம்... சசிக்குமாருக்கு அப்படி என்ன நெருக்கடி?
இலங்கைத் தமிழர்கள் விசாரணை என்ற பெயரில் கடும் சித்ரவதைக்கு ஆளாகின்றனர். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அகதிகளின் வலியை இயக்குனர் சத்ய சிவா அழுத்தமாகக் காட்டியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு அப்புறம் சசிக்குமார் படத்தைப் பார்க்க ஆவலாக இருந்தார்கள். அதைத் தொடர்ந்து ப்ரீடம் படம் இன்று அவரது நடிப்பில் ரிலீஸாக இருந்தது. ஆனால் படம் வரவில்லை. என்ன சிக்கல்னு சரியாகத் தெரியல. தயாரிப்பு தரப்பில் தான் சிக்கல் என்கிறார்கள். அவர்களும் இன்னைக்குப் படம் ரிலீஸ் ஆகல. உங்க பணத்தை எல்லாம் திருப்பித் தாரோம்னு சொல்லிட்டாங்களாம்.
அந்தக் காலத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்கு முன்பு ஆவலுடன் காத்து இருப்பார்கள். ஆனால் கடைசியில் படப்பெட்டி இன்னும் வரலன்னு சொல்லிடுவாங்க. அதனால் படம் வெளியாகத் தாமதமாகும். இது ஈழத்தமிழர்கள் பற்றிய கதை என்று சொல்லப்பட்டது. டூரிஸ்ட் ஃபேமிலியும் அதுசம்பந்தமான கதைதான். ஆனால் சென்சார் போர்டு சர்டிபிகேட் எல்லாம் கொடுத்த பிறகு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
திரையங்குகளில் டிக்கெட் முன்பதிவு கூட செய்துவிட்டார்கள். கடைசியில் இந்தப் படத்திற்கான டிக்கெட் வாங்கியவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இந்த ப்ரீடம் படமானது உண்மைக்கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்கிறார்கள்.
ஆனால் அதனால் தான் சிக்கலா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. பல திரைப்படங்களுக்கு நாளைக்குப் படம் ரிலீஸ்னா இன்னைக்குத் தடை செய்வோம் என சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வழக்குப் போடுவார்கள். அந்த வகையில் இந்தப் படத்துக்கு உண்மையான பிரச்சனை என்ன என்பது விரைவில் தெரியும். எதுவாக இருந்தாலும் சசிக்குமாரின் இந்தப் படம் உடனே திரைக்கு வர வேண்டும் என்பதே திரையுலக ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
படத்திற்கான பிரச்சனை இன்றைக்குள் தீர்க்கப்பட்டு நாளை வெளியாகி விடும் என்றும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.