Biggboss: அடடா வேஷம் கலஞ்சிடுச்சே… வாடா போடா எனக் கத்திய அன்ஷிதா… வெளிவரும் உண்மை முகம்!..
அன்ஷிதா மற்றும் அர்னவின் பிரச்னை ரசிகர்களிடம் ஏற்கனவே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
BiggbossTamil: தமிழ் பிக்பாஸில் சக போட்டியாளர்களை வாடா, போடா என அன்ஷிதா பேசி இருக்கும் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 8 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருக்கிறார். நேற்று முதல் வாரத்தினை விஜய் சேதுபதி தக் லைஃப்பால் கலைகட்ட வைத்தார். இதுவே ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
நேற்றைய எபிசோட்டில் எல்லா போட்டியாளர்களையும் தன் ஸ்டைலில் கலாய்த்தார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்லாமல் ரவீந்தர் ரவிசந்திரன் நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை காரணமாக எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேறிய தன்னுடைய சக போட்டியாளர்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
இது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்றைய நாளில் நாமினேஷன் மற்றும் கேப்டன் போட்டிகள் நடந்துள்ளது. இதில் நாமினேஷனில் சச்சனா, ஜெப்ரி, தீபக், ரஞ்சித் உள்ளிட்ட 6 ஆண் மற்றும் 4 பெண் போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் யாருக்கு வாக்கு அதிகமாக கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் முத்துகுமரன் மற்றும் அன்ஷிதா இருவரும் சண்டையிட்டு கொள்ளும் புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துகுமரன் அமைதியாக பேசினாலும் அன்ஷிதா கத்திக்கொண்டு இருக்கிறார்.
அன்ஷிதா முத்துக்குமரனை போடா பேசாதே என திட்டிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்து போட்டியாளர்கள் அதிர்ச்சி நிற்கின்றனர். கடந்த வாரம் அமைதி காத்த அன்ஷிதா இந்த வாரம் ஆரம்பத்திலே இப்படி பேசி இருப்பது அவருக்கு மேலும் நெகட்டிவ் இமேஜை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.