மனைவியை ஏமாற்றும் போது தெரியலையா?.. சின்ன பொண்ண ஏமாத்திட்டாங்களாம்.. கொந்தளிக்கும் அர்னவ்!..

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அர்னவ் முதல் எவிக்‌ஷனாக சாச்சனா போனதற்கு தனது காதலி அன்ஷிதாவுடன் சண்டை போட்டுள்ளார்.

By :  saranya
Update: 2024-10-07 15:34 GMT

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே எவிக்‌ஷன் வைத்து அதிரடியாக இளம் போட்டியாளரான சாச்சனாவை வெளியேற்றி விட்டனர். பிக் பாஸ் வீட்டில் இந்த முறை ஏகப்பட்ட சீரியல் நடிகர்களும் முத்தின கத்தரிக்காய்களும் தான் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்துள்ளனர். 

இந்நிலையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில், சும்மா இல்லாமல் வாயை விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் நாளே கண்ணீரும் கதறலுமாக வெளியேறினார்.

சினிமாவிலேயே நல்லா நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் சாச்சனா ஏன் போக வேண்டும் என விஜய் சேதுபதியே அவரை கேள்வி கேட்டு தொலைத்து எடுத்த நிலையில், ஒரே நாளில் எவிக்‌ஷன் என்றால் நான் வெளியே போகிறேன் என அதிக பிரசங்கித்தனமாக சாச்சனா பேசியதை காரணம் காட்டி சக போட்டியாளர்கள் அவரை வெளியேற்றினர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி கொடுத்த அந்த மாதிரி கோப்பையை உடைத்து சாச்சனா வெளியேறிய நிலையில், தனது புதிய காதலியான அன்ஷிதாவிடம் கோபப்பட்டு அர்னவ் பேசிய காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளன.

சின்னத்திரை நடிகை திவ்யாவை திருமணம் செய்து அவரை கொடுமைப்படுத்தி ஏமாற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அன்ஷிதாவுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாகத்தான் அர்னவ் தன்னை கழட்டி விட்டு விட்டார் என திவ்யா புகார் அளித்திருந்தார். 

தாலி கட்டிய மனைவியையே ஏமாற்றி விட்டு அடுத்த காதலியுடன் ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள நிலையில், சின்ன பெண்ணை ஏமாற்றி விட்டார்கள் என மற்ற போட்டியாளர்களை பற்றி அன்ஷிதாவுடன் தனியாக பொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் காமெடியாகத்தான் இருப்பதாக சின்னத்திரை ரசிகர்கள் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவை அடி வெளுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News