இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல… பிக்பாஸ் பிரபலத்தால் கடுப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் பிரபலம் தங்களுடைய சீசன் குறித்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது

By :  Akhilan
Update: 2024-10-18 15:22 GMT

MayaKrishnan: பிக்பாஸ் தமிழ் கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றத்தை குறித்து நடிகை மாயா கிருஷ்ணன் தெரிவித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பாக நடந்து வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வருகிறார். வார இறுதி நாட்கள் பெரும் வரவேற்பை கூட முதல் ஐந்து நாட்களில் போட்டியாளர்களால் ரசிகர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற கேள்வி நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த சீசன் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. அதிலும் முதல் முறையாக ரசிகர்களின் அனுமதியில்லாமல் ஒரு போட்டியாளரை சக போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பு குழு வெளியேற்றியது. இது ரசிகர்களுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சனையின் போது சிக்கிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கோரிக்கை வைத்த போட்டியாளர்களான மாயாகிருஷ்ணன், பூர்ணிமா ரவி, நிக்‌ஷன், ஐஷு உள்ளிட்டோர் ரசிகர்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களால் நிகழ்ச்சியில் வெல்லவும் முடியாமல் போனது.

இந்நிலையில் இந்த சீசன் குறித்து நடிகை மாயாகிருஷ்ணன் பேசியிருக்கும் ஒரு வீடியோவில், பிக் பாஸ் சீசன் 7ல் நிறைய பிரச்சனைகள் நடந்தது. உங்களுக்கு நிறைய விஷயங்கள் காட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. வேறு எதுவும் என்னால் இப்பொழுது சொல்ல முடியாது என பேசி இருப்பார்.

இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வரும் ரசிகர்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுடைய காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது தானே. நீங்களே அதற்குரிய காரணத்தை சொல்ல வேண்டியது தானே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 தொடங்கிய பின்னர் தான் கடந்த சீசன் போட்டியாளர்கள் விமர்சிப்பதை ரசிகர்கள் விட்டுருக்கும் நிலையில் தேவையே இல்லாமல் ரசிகர்களை மீண்டும் சீண்டுவது போல் மாயாகிருஷ்ணன் பேசியிருப்பது ரசிகர்களிடம் கடுப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News