தமிழ்நாட்டு பொண்ணுதான நீ… இந்தி பிக்பாஸில் கலங்கி நிற்கும் ஸ்ருதிகா அர்ஜீன்…
ஸ்ருதிகாவிடம் நன்றாக பேசிவிட்டு பின்னால் புறணி பேசும் கும்பல் உருவாகிவிட்டது
ShrutikaArjun: முதல்முறையாக தமிழ்நாட்டில் இருந்து இந்தி பிக்பாஸ் சீசன்18ல் கலந்து கொண்டு இருக்கிறார் ஸ்ருதிகா. முதல் வாரம் ஜாலியாக சென்ற ஸ்ருதிகாவிற்கு பிரச்னை தொடங்கி இருப்பதாக அவரே தெரிவித்துஇருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவில் இருந்து முதல் நடிகையாக ஸ்ருதிகா அர்ஜூன் பிக்பாஸ் இந்தியில் கலந்துக்கொண்டு இருக்கிறார். முதல் வாரத்தில் அவரின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. அதிலும் ஸ்ருதிகா தன்னுடைய கணவர் குறித்து பேசிய எல்லாமே ஹிட் ரகம்தான்.
முதல் வாரமே ஸ்ருதிகாவை அழைத்த சல்மான்கான் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு ஆசை என்னிடம் திட்டு வாங்க வேண்டுமென எனக் கேட்கிறார். அதற்கு ஸ்ருதிகா ஆமாசார் என்கிறார். அப்போ வீட்டுக்கு கிளம்புங்க எனக் கலாய்க்கிறார். இன்னும் சில வாரம் திட்டு வாங்கிட்டு போறேன் சார் என ஸ்ருதிஹா சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா செய்யும் அட்டகாசங்கள் வீடியோக்களாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுவாகவே ஸ்ருதிகா கலகலப்பான நடிகை இதனால் அவருடைய பாசிட்டிவ் ரசிகர்களிடம் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு வீடியோவில் ஸ்ருதிகா கலங்கி போய் பேசி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நான் இந்தியில் பேசுவது சிலருக்கு தவறாக தெரிகிறது. நீ தமிழ்நாட்டிலிருந்து வந்த பெண் தானே என அலட்சியமாக கேட்கிறார்கள் என சக போட்டியாளரிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் ஸ்ருதிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிக்பாஸில் தன்னுடைய போட்டியாளர்களுக்கு தமிழ் பேச கற்றுக் கொடுப்பது, ரஜினி டயலாக் பேசி சிரிப்பது என ஸ்ருதிகாவின் அட்ராசிட்டி வட இந்திய ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. சமீபத்தில் கூட பிக்பாஸ் இடமே தமிழில் பேசி சிரிக்க வைத்ததும் வைரலானது குறிப்பிடத்தக்கது.