பிள்ளையார் சுழி போடுவதே இவர்தான்.. வயநாடு பாதிப்பில் நிதியுதவி வழங்கிய சூர்யா குடும்பம்

வெள்ள நிவாரணமாக சூர்யா கார்த்தி சேர்ந்து 50 லட்சம் நிதியுதவி

Update: 2024-08-07 13:00 GMT

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஒரு நட்சத்திர குடும்பமாக இன்று வரை சினிமாவில் மதிக்கத்தக்க வகையில் சிவக்குமார் குடும்பம் திகழ்ந்து வருகிறது. அண்ணன் தம்பி இருவரும் உண்மையிலேயே சிங்கம் சிறுத்தையாகத்தான் சீறி வருகிறார்கள் சினிமாவில்.

சூர்யா தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியும் கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியை பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் புது முக இயக்குனர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

இன்னொரு பக்கம் சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகாவும் ஹிந்தியில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டிலாகி விட்டனர். அவ்வப்போது சூர்யா மட்டும்தான் சென்னைக்கு வந்து போக இருக்கிறார்.

அதுவும் தன் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவும் ஒரு பெருந்தன்மையான நடிகர்களாகவே சூர்யாவும் கார்த்தியும் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட சூர்யாவின் பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் இரத்த தானம் கொடுத்து கொண்டாடி வந்தார்கள்.

சூர்யாவும் ரத்ததானம் வழங்கினார். மேலும் சமீபத்தில் தன் ரசிகரின் மரணத்திற்கு அவர் குடும்பத்தை நேரில் போய் சந்தித்து ஆறுதல் கூறினார். இன்னொரு பக்கம் சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்டண்ட் ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்,

அவர் வீட்டிற்கு சென்று அவர் குடும்பத்திற்கு நேரில் போய் ஆறுதல் அளித்ததோடு போதுமான பண உதவியையும் செய்தார் கார்த்தி. இப்படி தன்னை சார்ந்த ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் இயற்கை சீற்றத்தால் குடும்பத்தை இழந்து வாடும் குடும்பத்திற்கும் அவ்வப்போது உதவிகளை வழங்குவதில் சிவக்குமார் குடும்பம்தான் முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள்.

இப்போது கூட வயநாடு வெள்ளப்பாதிப்பில் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டனர். சிலர் தன் குடும்பங்களை இழந்து தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு உதவி வழங்கும் விதமாக சூர்யா , கார்த்தி, மற்றும் ஜோதிகா சேர்ந்து 50 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்களாம். இதுதான் இப்போது வைரலாகி வருகின்றது.

Tags:    

Similar News