விஜய் கொடுத்த துப்பாக்கி இப்ப என்கிட்ட இல்ல!.. இப்படி சொல்லிட்டாரே எஸ்.கே!...
விஜய் கொடுத்த துப்பாக்கி இப்ப என்கிட்ட இல்ல!.. இப்படி சொல்லிட்டாரே எஸ்.கே!...
Sivakarthikeyan vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானதோடு குறுகிய காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
விஜய் டிவியில் வேலை செய்தவற்கு முன்பு நிறைய இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தார். போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே இவரின் ஆசையாக இருந்தது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டி.எஸ்.பி ஆக வேண்டும் என்கிற ஆசையில் அது தொடர்பான தேர்வுகளை எழுத திட்டமிட்டிருந்தார்.
ஆனால், காவல்துறை அதிகாரியாக இருந்த அவரின் அப்பா இறந்துவிட்டதால் அந்த தேர்வை எழுத அவரின் அம்மா அனுமதிக்கவில்லை. எனவேதான் மிமிக்ரி, டிவி ஆங்கர் என ரூட் மாறினார். விஜய், அஜித், ரஜினி படங்களுக்கு பின் சிவகார்த்திகேயன் படங்கள் அதிக வசூலை பெற்று வருகிறது.
விஜய் அரசியலுக்கு செல்லப்போகிறார் என்றதும் அடுத்த விஜய் யார் என பலரும் பேசியபோது சிவகார்த்திகேயனே அந்த இடத்தை பிடிப்பார் என பலரும் சொன்னார்கள். ஏனெனில், விஜய்க்கு அடுத்து குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். எனவே, அவரே அடுத்த விஜய் என பலரும் பேசினார்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்வார். ‘நீங்க போங்க சார். உங்க வேலைய நான் பாத்துக்கிறேன்’ என வசனம் பேசுவார் எஸ்.கே. இது காட்சிக்கு ஏற்றது போல் இருந்தாலும் வேண்டுமென்றே வைக்கப்பட்டது போலவே இருந்தது.
இந்நிலையில், அமரன் பட புரமோஷனில் ‘அந்த துப்பாக்கி இப்போ சினிமாவில் இல்லை. அந்த இடத்திற்கு நீங்க போக வாய்ப்பு இருக்கா?’ என ஆங்கர் கேட்டதற்கு ‘அப்படியெல்லாம் இல்லை.. அந்த காட்சி சினிமாவில் நடந்த ஒரு அழகான சம்பவம்.. அவ்வளவுதான். ஒரு சீனியர் நடிகர் அவரோட அடுத்த செட் நடிகரோட ஸ்கிரீன் ஷேர் பண்ணார் என்று மட்டும்தான் அதை பார்க்கிறேன். மத்தபடி நான் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு’ என பதில் சொல்லி இருக்கிறார் எஸ்.கே.