பெண்ணை பத்தினியா பார்க்காதீங்க!.. கொளுத்திப்போட்ட இயக்குனர்!.. இதெல்லாம் தேவையா?!..
வெற்றிமாறன் படங்கள் என்றாலே அதுல ஒரு புரட்சிகரமான கதையும் இருக்கும். சமீபத்தில் வெளியான அசுரன், விடுதலை படங்கள் இந்த ரகங்களே. அந்த வகையில் அவரது உதவி இயக்குனரான வர்ஷா பரத்தும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். படத்தின் பெயர் பேட் கேர்ள். இந்தப் பட விழாவில் அந்த துணை இயக்குனர் பேசியது தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏடாகூடமாக: அவர் எந்தப் பாய்ண்டை சொல்கிறார் என்பதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம். ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் சொல்வது என்பது கொஞ்சம் அழுத்தமாகச் சொல்வதற்காகத் தான்.
அதாவது தான் சொல்ல வந்த கருத்து அப்படியே போய்ச் சேர வேண்டும் என்ற ஆதங்கத்தில் சொல்வது. இது சில சமயங்களில் ஏடாகூடமாகப் போய் முடியவும் வாய்ப்புள்ளது. அப்படி என்னதான் அவர் பேசியுள்ளார்னு பாருங்க.
பத்தினி: தமிழ்சினிமாக்களில் எப்பவுமே பெண் என்றால் ஒரு பூ, ஒரு பத்தினி, ஒரு தெய்வம், தாய் தெய்வம், தூய்மை அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. இது எல்லாம் ஒரு பெண் தோளில் சுமப்பதற்கு அழுத்தமாக இருக்கிறது.
அதனால் நான் பெண்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க நினைச்சேன். பெண்ணை புனிதமாக பார்க்க வேணாம். மனிதனாகப் பார்த்தாலே போதும் என்கிறார் அந்தத் துணை இயக்குனர் வர்ஷா பரத்.
பேட் கேர்ள்: அனுராக் காஷ்யப், வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் பேட் கேர்ள் படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹரிது அருண், டீஜே அருணாச்சலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் மிஷ்கின், டாப்ஸி, கலைப்புலி தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் படம் பெண்ணின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வர்ஷா பரத் ஒரு பெண் இயக்குனர் என்பதால் படத்தைத் தெள்ளத் தெளிவாகவே எடுத்திருப்பார் என்று நம்பலாம். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தவறான முடிவு எடுக்கிறாள். வாழ்க்கையைக் கடப்பதற்காகப் போராடுகிறாள் என்றும் பேசியுள்ளார் வர்ஷா.