மீனாட்சி அம்மா படத்தை காப்பாற்று...3BHK வெற்றிக்காக வேண்டிக்கொண்ட சரத்குமார்

Published On 2025-07-06 12:49 IST   |   Updated On 2025-07-06 12:49:00 IST

சரத்குமார்,தேவயானி,சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளிவந்துள்ள படம் 3BHK. கலவையான வெளியான இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இருக்கும் கனவு எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். எவ்வளவு நாள்தான் வாடகை வீட்டில் இருப்பது நமக்கென்று ஒரு சிறு வீடாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். இதுவே படத்தின் கதை. 



இந்த நிலையில் 3BHK படத்திற்காக அப்படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சரத்குமார், தேவயானி மற்றும் சித்தார்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் படம் வெற்றிபெற வேண்டி வழிபட்டனர்.

Tags:    

Similar News