இதெல்லாம் தேவையா?… விஷாலின் அந்த ’வைரல்’ படத்தின் பார்ட்2 ரெடியாகுதாமே!
Vishal: விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஒன்று தற்போது இரண்டாம் பாகத்திற்கு தயாராகி இருக்கும் விஷயம் வெளியாகியிருக்கிறது.
தற்போதையல்லாம் தமிழ் திரைப்படங்கள் ஒன்று வெற்றி பெற்றுவிட்டால் அதை இரண்டாம் பாகம் எடுக்கும் வழக்கம் வந்துவிட்டது. அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் இரண்டாம் பாகம் தொடங்கி விரைவில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தயாராக இருக்கிறது.
இந்த வரிசையில் தற்போது விஷாலின் ஆம்பள திரைப்படமும் இணைந்து இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், கிரண் உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் விஷால் காரில் முன்னாள் அமர்ந்து கொண்டு பறக்கும் காட்சி இன்றளவும் ரசிகர்களிடம் வைரல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ சத்தம் இல்லாமல் ஷூட் செய்யப்பட்டு தயாராகி இருக்கிறதாம்
மதகஜ ராஜா திரைப்படம் வெற்றி அடைந்த பின்னர் அதே ரூட்டில் தற்போது ஆம்பள2 இயக்க சுந்தர்.சி திட்டமிட்டு இருக்கிறார். ஒரே நேரத்தில் மூக்குத்தி அம்மன் 2 மற்றும் ஆம்பள 2 படத்தினை இயக்கவும் முடிவெடுத்துள்ளாஅர்.
தற்போது விஷாலிடம் மிகப்பெரிய அளவில் திரைப்படங்கள் இல்லாமல் இருப்பதால் அவரும் உடனே ஆம்பள 2 திரைப்படத்தை தொடங்க முடிவெடுத்து இருக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.