2வது கல்யாணம் எப்போது?!.. மனம் திறந்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்!. அப்படிப்போடு!..
Madhampatti Rangaraj: பிரபல சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து பேசி இருக்கும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ச்சியாக தன்னுடைய குடும்பத் தொழிலான சமையல் கலையில் பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் கேட்டரிங் செய்து வந்தார்.
அதிலேயே அவர் மிகப்பெரிய புகழைப் பெற விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் வெங்கடேஷ் பட் வெளியேற அவர் இடத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளே வந்தார்.
ஆரம்பத்தில் இவர் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தி ஏற்படாமல் போக நிகழ்ச்சியின் பினாலேக்குள் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டார். ஆனால் இங்குதான் இவர் வாழ்க்கையில் முக்கிய விஷயங்களை நடந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் இவருக்கு டிசைனராக இருந்த ஜாய் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு என்னவர், என் உயிர் என ஸ்டேட்டஸ் போடுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இதனால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரோ என பலருக்கும் கேள்வி எழுந்தது. இதில் அவருடைய முதல் மனைவி சுருதி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாவில் நான்தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் கூறுகையில், என் வாழ்க்கை தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தமானது. அதை நான் ஏன் வெளியில் பேச வேண்டும் என்ற கேள்வி இருக்கில்லையா? அவசியம் பேசியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் அப்பொழுது விபரமாக வெளியில் சொல்வேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இவரின் இந்த ஸ்டேட்மெண்டை பார்த்து ரசிகர்கள் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துவிட்டு தான் இவர் இப்படி பேசுகிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் பிரபலங்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை குறித்து பேசுவது அவர் அவர் விருப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.