வைர மூக்குத்தி.. காஸ்ட்லி பத்திரிக்கை.. மூக்குத்தி அம்மன் பூஜையில் நடக்க இருக்கும் மாஸ் விஷயங்கள்..
Mookuthi Amman2: நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் பூஜையிலேயே வேல்ஸ் நிறுவனம் மாஸ் காட்டி இருக்கும் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தையும் ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை இல்லாமல் வேல்ஸ் நிறுவனம் மற்றும் நயன்தாரா இணையும் மூக்குத்தி அம்மன் 2 என்று அறிவிப்பு வெளியானது. இதனால் இப்படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது.
இது போன்ற படங்களுக்கு பிரபலமான இயக்குனர் சுந்தர் சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேல்ஸ் நிறுவனம் அழைத்து வந்திருக்கிறது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஷூட்டிங் தொடங்க வரும் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக பூஜை நடத்தப்பட இருக்கிறதாம்.
முதல் முறையாக ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பூஜைக்கான பத்திரிகை மட்டுமே 6000 ரூபாயிற்கு அதிகமான விலையில் காஸ்டிலியாக அடித்து பிரம்மாண்டம் காட்டி இருக்கின்றனர்.
மேலும் பூஜை நடக்கும் போது முக்கிய பெண் இன்ப்ளூயன்சர்கள் 20 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு வைர மூக்குதியை பரிசாக கொடுக்க தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடக்கும் பூஜைக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை முடித்து இந்த வருட கடைசிக்குள் வெளியிடவும் படம் நிறுவனம் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.