ஹார்ட் டச்சிங்கான வீடியோ.. பசங்களுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த ஆர்த்தி ரவி
arthiravi
Arthi Ravi: ஜெயம் ரவி ஆர்த்தி ரவி பிரிவுக்கு பிறகு முதன் முறையாக தன் பசங்களுடன் இருக்கும் வீடியோவை ஆர்த்தி ரவி பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை பார்க்கும் பொழுது அனைவருக்கும் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது. இத்தனை நாட்களாக ஆர்த்தி ரவி மீதுதான் கடுமையான விமர்சனங்கள் வந்தன. பணத்தாசை பிடித்தவர் என்றும் ரவி மோகனுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார் என்றும் தாயுடன் சேர்ந்து ரவி மோகனை டார்ச்சர் செய்வதாகவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஆர்த்தி ரவி மீது இருந்து கொண்டே வந்தன .
இந்த நிலையில் திடீரென ரவி மோகன் பிரபல பாடகி கெனிஷாவுடன் கைகோர்த்தபடி ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதை பார்க்கும் பொழுது அத்தனை ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவரை கெனிஷாவை அப்படி யாரும் பேசாதீர்கள் நானும் அவரும் இணைந்து ஒரு ஹீலிங் சென்டரை வைக்கப் போகிறோம். அவர் என்னுடைய ஒரு நல்ல தோழி என்றெல்லாம் கூறி வந்த நிலையில் திடீரென திருமணத்தில் அதுவும் ஜோடியாக இருவருமே ஒரே கலரில் உடை அணிந்து கெனிஷாவின் கையை விடாமல் பிடித்தவாறு நடந்து வருவதை பார்க்கும் பொழுது அனைவருக்கும் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் ரவி மோகன் மீது வைத்திருந்த நம்பிக்கையே போய்விட்டது. அதன் பிறகு தான் ரவி மோகன் இப்படி எல்லாம் ஏற்கனவே கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்ததனால்தான் ஆர்த்தி ரவிக்கு சந்தேகமே வந்திருக்க கூடும். எந்த ஒரு பெண்ணுக்கும் வரும் சந்தேகம்தானே. அதுதான் இவ்வளவு பூதாகரமாக வெடித்து இருக்கிறது. ஆனால் இதை ரவி மோகன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆர்த்தி ரவி மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தாரோ என இப்போது பல பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் ரவி மோகனும் கெனிஷாவும் ஜோடியாக வந்ததை அடுத்து அன்று மாலையே ஆர்த்தி ரவி இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். இத்தனை நாள் என் மகன்களுக்காகத் தான் மௌனம் காத்து வந்தேன். இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். என் மகன்களுக்காக நான் போராடுவேன் என்றவாறு பேசி இருந்தார். அது மட்டுமல்ல ரவி மோகன் அவருடைய பொறுப்பில் இருந்து விலகி விட்டார். அதனால் இனிமேல் நான் போராட போகிறேன் என்றவாறு மிகவும் உருக்கமாக அந்த அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய இரு மகன்களுடன் ஆர்த்தி ரவி இருக்கும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. நீலகிரியில் அமைந்துள்ள லவ்டேல் என்ற ஒரு ஊரில் தன்னுடைய இரு மகன்களுடன் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கும் மாதிரியான வீடியோவை ஆர்த்தி ரவி வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய மகன்களின் சந்தோஷத்திற்காக தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை எந்த விதத்திலும் பெரிய அளவில் பாதித்த விடக்கூடாது என்பதற்காக இரு மகன்களை அழைத்துக் கொண்டு பிடித்த ஊர்களுக்கு சென்று அவர்களுக்காக இப்போது வாழ்ந்து வருகிறார் ஆர்த்தி ரவி.