அஜித்தால் தனுசுக்கு ஏற்பட்ட சிக்கல்.. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடின்ற மாதிரில்ல இருக்கு!
நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களை ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள், மற்றொருபுறம் தனது இயக்கம் என இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தி வருகின்றார். இவர் கடைசியாக ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.
இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கின்றது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷுக்கு ஒரு புதிய பிரச்சனை வந்திருக்கின்றது. அதுவும் நடிகர் அஜித்தின் திரைப்படங்களால் தான்.
நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி வந்தார்கள். ஆனால் திடீரென்று படம் பொங்கல் ரேசிலிருந்து விலகியது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஒருவேளை விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானால் அது தனுஷுக்கு சிக்கலாக அமையும். ஏனென்றால் அவர் இயங்கி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகின்றது. அது மட்டும் இல்லாமல் குபேரா திரைப்படத்தையும் பிப்ரவரி மாதம் தான் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக ஒரு புறம் தகவல் வெளியாகி இருக்கின்றது.
விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானால் தனுஷின் குபேரா திரைப்படம் அடி வாங்கும். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு புறம் இருக்க தனுஷ் தற்போது நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் மாதம் அதாவது தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
இதற்கிடையில் ஏப்ரல் மாதம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்துடன் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானால் நிச்சயம் இட்லி கடை திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றார் நடிகர் தனுஷ். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதை பொருத்து தனது படங்களின் ரிலீஸ் தேதியை அவர் மாற்றலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.