விஜயே இல்லை!.. யாரோடு போட்டி?!.. அஜித் எடுத்த விபரீத முடிவு?..

விஜய் இல்லாத சினிமாவில் அஜித் என்ன செய்வார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

By :  Murugan
Update: 2024-09-30 06:58 GMT

விஜய் அஜித்

Ajithkumar: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமலுக்கு பின் விஜய் - அஜித் என்றே இருக்கிறது. கடந்த 30 வருடங்களுக்கும் மேல் கோலிவுட்டில் இருவரும் போட்டி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், நேரில் சந்தித்துக்கொள்ளும்போது எம்.ஜி.அர் சிவாஜி எப்படியோ, ரஜினி, கமல் எப்படியோ அதுபோலவோ விஜய், அஜித்தும் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டி பரஸ்பரம் பழகி வருகிறார்கள்.

டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பல வருடங்களாக சண்டை போட்டு வருகிறார்கள். அதிலும், அசிங்கம் அசிங்கமாக ஹேஷ்டேக்குகளை உருவாக்கி வன்மத்தோடு திட்டிக் கொள்கிறார்கள். விஜயின் முகத்தை அசிங்கப்படுத்தி அஜித் ரசிகர்கள் மீம்ஸ்களும், வீடியோக்களை போட்டால் அஜித் ரசிகர்களும் அதையே செய்வார்கள்.

இதற்கு ஒரு எண்டே இல்லை என சொல்வது போல் இப்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் போட்டி என்பது இருக்க வேண்டும். அப்போதுதான் வேகமாக இயங்க முடியும். இதைத்தான் விஜயும், அஜித்தும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வதை தடுக்க இருவருமே தீவிர முயற்சி எடுக்கவில்லை. விஜய் என்ன செய்கிறார்? யாரின் இயக்கத்தில் நடிக்கிறார்?.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்படி இருக்கிறது?. பாடல்கள் மற்றும் டிரெய்லர், படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கிறது என எல்லாவற்றையும் கவனிப்பார் அஜித்.

ஒருபக்கம் விஜயும் அதையே செய்வார். அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசிப் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்போது விஜய் அரசியலுக்கு போவதால் அஜித் இனிமேல் யாருடன் போட்டி போடுவார் என்பது தெரியவில்லை.

அதனால்தான் மீண்டும் ரேஸ் விட கிளம்பிவிட்டார் அஜித் என சொல்கிறார்கள் சிலர். ஏனெனில், தான் போட்டி போட மற்ற நடிகர்கள் தனக்கு இணையானவர்கள் அல்ல என அஜித் நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஒருபக்கம், அவர் கார் ரேஸ் பக்கம் போனாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தமாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

Tags:    

Similar News