இட்லி கடை குறித்த கேள்வி.. அருண் விஜய் கிட்ட இருந்து இப்படி ஒரு பதில எதிர்பார்க்கலையே!..

By :  Ramya
Update: 2025-01-07 11:10 GMT

idly kadai

Arun Vijay: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் அருண் விஜய் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடி வருகின்றார். தொடர்ந்து ஒரு சில ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து வந்த இவருக்கு அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தது.


வணங்கான் திரைப்படம்: நடிகர் அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. முதலில் இப்படத்தை இயக்குனர் பாலா சூர்யாவை வைத்து எடுத்து வந்தார்.

பின்னர் படத்தின் கதையில் ஏற்பட்ட சில உடன்பாடு காரணமாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நடிகர் அருண் விஜய் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு உங்களுக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இதனால் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் .

சமீபத்தில் இப்படத்தில் ஆடியோ லான்ச் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்-ஆக மட்டுமல்லாமல் பாலா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவாகவும் இருந்தது.

இட்லி கடையில் அருண் விஜய்: இயக்குனர் பாலா ஒரு பக்கம் தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் நிலையில் அருண் விஜயையும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டியில் அருண் விஜயிடம் இட்லி கடை திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண் புனித ஏராளமான பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக அருண் விஜய் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் நோ கமெண்ட்ஸ், இட்லி கடை படத்தில் நான் நடிக்கிறேன் என்று யார் சொன்னது. உங்களுக்கு தகவல் வந்துச்சா? என்று கேட்டிருக்கின்றார்.


அவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் பலரும் இட்லி கடை படத்தில் அருண் விஜய் நடிக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அருண் விஜய் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியானதும் ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். தற்போது அருண் விஜய் கூறியதை பார்த்த பலரும் உண்மையாகவே இவர் இட்லி கடை படத்தில் நடிக்கிறாரா? என்று சந்தேகத்தில் இருந்து வருகிறார்கள்.

Tags:    

Similar News