அடுத்தடுத்த படத்தில் எகிறும் பட்ஜெட்!.. ஹாலிவுட் படத்துக்கு டப் கொடுக்கப்போறாரா தனுஷு..!

By :  Ramya
Update: 2024-12-21 15:13 GMT

dhanush

நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் நடிகர் தனுஷ். தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகின்றார். கடைசியாக தனது 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ்.

இயக்கும் படங்கள்:

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி படம் வெளியாக இருக்கின்றது. அதற்கு அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.


இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார் வருகின்றார் நடிகர் தனுஷ்.

மற்ற இயக்குனர்களின் படங்கள்: நடிகர் தனுஷ் தனது இயக்கம் மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக மதுரை அன்புச் செழியன் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றார். இப்படத்தை முடித்த கையோடு ஹிந்தியில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகை இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

புதிய படத்தின் பட்ஜெட்: தற்போது அவர் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படத்தின் பட்ஜெட் 104 கோடியாகும். அதற்கு அடுத்ததாக நடிகர் தனுஷ் வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க இருக்கின்றார். இதற்கு இடையில் நடிகர் தனுஷின் எந்த திரைப்படமும் வெளியாக போவதில்லை. ஆனால் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு 145 கோடி பட்ஜெட்டாக முடிவு செய்து இருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் தான் இந்த அளவுக்கு பட்ஜெட்டில் படத்தை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு திரைப்படத்திற்கு மற்றொரு திரைப்படம் இத்தனை கோடி வித்தியாசமா? என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள். மேலும் நடிகர் தனுஷ் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கப் போகிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Tags:    

Similar News