என்னது!.. ரஜினிக்கு மகனா தனுஷா?.. யோசனை எல்லாம் பலமா இருக்கே வெங்கட் பிரபு!..

By :  Ramya
Update: 2024-12-22 05:48 GMT

dhanush 

இயக்குனர் வெங்கட் பிரபு: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் வெங்கட் பிரபு. எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலமாக நேரடியாக இயக்குனராக களம் இறங்கினார். முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. உதவி இயக்குனராக அவர் பணியாற்றவில்லை என்றாலும் திரைத்துறையில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்தார்.

முதலில் பாடகர், நடிகர் என சினிமாவில் வலம் வந்த இவரால் அவர் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. அவர் ஹீரோவாக நடித்து வந்த பல படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் வெங்கட் பிரபு ஒரு ராசி இல்லாத நபர் என்று பேச தொடங்கினார்கள். இருப்பினும் தனது தன்னம்பிக்கையை கைவிடாத வெங்கட் பிரபு தொடர்ந்து முயற்சி செய்தார்.


அதன் பிறகு தான் சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இப்படத்தை தொடர்ந்து சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கினார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் சுமாரான வெற்றியை கொடுத்தது.

அஜித்தின் மங்காத்தா:

யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் அஜித்தை வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் மூலமாக வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரியாணி, மாஸ், சென்னை 600028 இரண்டாம் பாகம், மாநாடு போன்ற திரைப்படங்களை இயக்கி மேலும் வெற்றி கண்டார். அதிலும் மாநாடு படம் புது ட்ரெண்ட்டை உருவாக்கியது.

விஜயின் கோட்:

வெங்கட் பிரபு கடைசியாக நடிகர் விஜய் வைத்து கோட் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்.

இப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகின்றார் என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து நடித்து வரும் நிலையில் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் லிஸ்டில் தற்போதைக்கு இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது.

ரஜினிக்கு மகனாக தனுஷா?

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் தெரிவித்து இருந்த ஒரு செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது கோட் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாக அதேபோன்ற ஒரு கதையை ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரிவித்து இருந்தாராம்.

அந்த கதையும் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போய் இருக்கின்றது. ஆனால் அந்தப் படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரட்டைக் கதாபாத்திரம் என்பதை நான் கூறவில்லை. ஏனென்றால் ரஜினிகாந்த் அவர்களின் மகன் கதாபாத்திரத்தில் நான் நடிகர் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.


கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தையாகவும் மகனாகவும் டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் அப்பா வேடத்தை மட்டும் கொடுத்துவிட்டு மகன் வேடத்திற்கு தனுஷை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அது கடைசியில் நடக்காமல் போய்விட்டது என்று கூறி இருக்கின்றார்.

Tags:    

Similar News