பொது இடத்தில் அட்லீயை திட்டிய கீர்த்தி சுரேஷ்?.. என்ன இப்படி பேசிட்டாங்க.. வைரல் வீடியோ..
இயக்குனர் அட்லீ: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய அட்லீ அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கி மேலும் பிரபலமானார். தான் இயக்கிய படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் ஹிந்திக்கு சென்று ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் இந்திய அளவில் பெரும் கவனத்தை எடுத்தார்.
பேபி ஜான்:
ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்லையே செட்டிலான அட்லி தொடர்ந்து அங்கு படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது தமிழில் விஜய், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தெறி திரைப்படத்தினை ஹிந்தியில் தயாரித்து இருக்கின்றார்.
இதன் மூலமாக பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் களமிறங்குகின்றார் இயக்குனர் அட்லி. இப்படத்தில் வரும் தவான் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிறது இதனால் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
தாலியுடன் ப்ரோமோஷன்:
திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதல் கணவரை தனியாக விட்டுவிட்டு பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் கிளாமரான உடையில் தாலியுடன் அவர் வந்திருந்த புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வந்தது. தற்போது வரை பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு மாடன் உடையில் மஞ்சள் தாலியுடன் வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ்.
அட்லியை திட்டிய கீர்த்தி:
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும்போது அட்லீயின் மனைவி பிரியாவும், கீர்த்தி சுரேஷும் தங்களை புகைப்படம் எடுக்கும்படி அட்லியிடம் ஃபோனை கொடுத்து போஸ் கொடுத்து இருக்கிறார்கள். இவர்களை புகைப்படம் எடுக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே தவறுதலாக அட்லீ வீடியோவை கிளிக் செய்து விட்டார்.
தான் புகைப்படம் எடுத்து விட்டதாக கூறி அட்லி, பிரியா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் காட்ட கீர்த்தி சுரேஷ் பொது இடம் என்று கூட பார்க்காமல் என்னடா போட்டோ எடுக்க சொன்னா வீடியோ எடுத்து வச்சிருக்க என்று திட்டுகின்றார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.