சிவாஜி குடும்பத்துல சொத்து பிரச்சனையா? பிரபலம் சொல்லும் தகவல்
ராம்குமாரின் மகன் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சில எமோஷனலான விஷயங்களையும் தெரிவித்து இருந்தார். குடும்பத்தில் சரியான மரியாதை எங்களுக்குக் கிடைக்கலன்னும் சொன்னார். இதுபற்றி பிரபல மருத்துவர் காந்தாராஜ் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
பணக்கார வீட்டுலன்னாலே சொத்துத்தகராறு நடக்கத்தான் செய்யும். ஒரே பிள்ளையா இருந்தாலும் கூட சுத்துப்பட்டில இருக்கறற மாமா, மச்சான் எல்லாம் வந்து தகராறு பண்ணத்தான் செய்வாங்க. நான் இல்லன்னா உங்க அப்பா ஏதுடான்னு கேட்பாங்க. 2வது சம்சாரம் வந்தாலே இந்தப் பிரச்சனை வருகிறதேன்னு கேட்டபோது இப்படி சொல்கிறார் மருத்துவர்.
2வது பொண்டாட்டியே ஆசைப்பட்டு கட்டிக்கறதுதான். முதல் பொண்டாட்டியை குடும்பத்துல பார்த்து கட்டி வைப்பாங்க. என்னதான் இருந்தாலும் 2வது தாரம்தான. அதனால இவங்க சொத்துக்காகத் தான் வந்தாங்கன்னு வந்துடுது. அதை மூத்த தாரத்துப் பசங்க விடுவாங்களா? அதெல்லாம் எல்லா இடத்துலயும் உள்ளதுதான்.
சிவாஜி குடும்பத்துல சொத்து பிரச்சனைங்கறது அவரு இருக்கும்போதே இருந்ததா? இருந்துருக்கலாம். யாருக்குத் தெரியும். அது அவங்க சொந்த விஷயம். அதெல்லாம் நமக்குத் தெரியாது. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஜொலிக்கவில்லைன்னா அதுக்குக் காரணம் அவருடைய முகம்தான். அவரு பார்க்கறதுக்கு இந்தி நடிகர் மாதிரி இருக்காரு. இந்திப் படங்களுக்குப் போயிருக்கலாம்.
நம்ம ஊருக்குத் தேவையான முகம் அவருக்கிட்ட இல்ல. சிவாஜியோட பேரன்னு சொல்லும்போது அவரோட குடும்பத்து முகமே அவருக்கிட்ட இல்லையே. ராம்குமாரின் மகன் துஷ்யந்துக்கும் அது இல்லை. பார்த்த உடனே கவர்ந்து இழுக்கக்கூடிய முகம் இல்லை.
அந்தவகையில் பிரபுவுக்கு இயல்பான நடிப்பு இருந்தது. அதனாலதான் அவரு பெரிய நடிகர்கள் இருக்கும்போது கூட உள்ளே வந்தாரு. ரஜினி, கமலை புக் பண்ண முடியாதவர்கள் பிரபுவை போட்டு படம் எடுத்தாங்க. அவருக்குன்னு ஒரு பிசினஸ் இருக்கு என்கிறார் பிரபல மருத்துவர் காந்தாராஜ்.
சிவாஜிக்கு கமலா தான் துணைவியார். இவர்களுக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி என 4 பிள்ளைகள் உள்ளனர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. ராம்குமாரின் மகன் துஷ்யந்த் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கூட்டுக்குடும்பத்தில் ஆர்வம் கொண்டவர். இதனால் தனது தம்பி சண்முகம், அண்ணன் தங்கவேலு ஆகியோரது குடும்பங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.