கமல் லைன் அப்ல இவ்ளோ படங்களா? லிஸ்ட்ல அந்தக் கனவுப்படமும் இருக்கே..!

By :  Sankaran
Update: 2025-02-03 08:03 GMT

74 வயதிலும் ரஜினி சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் 71 வயதிலும் கமல் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஆச்சரியமான விஷயம்தான். இளம் நடிகர்களுக்குக் கூட அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. அதைத் தொடர்ந்து  கமல், அன்பறிவு காம்போவில் உருவாகும் படம், மருதநாயகம், விக்ரம் 2 குறித்து அப்டேட்டுகள் பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பாருங்க...

கமல் திரைக்கதை: அன்பறிவு சொன்ன லைனை டெவலப் பண்ணி கமல் திரைக்கதை எழுதி உள்ளார். அது உலகத்தரம் வாய்ந்த ஆக்ஷன் படமாக இருக்கும். அதற்கு ஏஐ டெக்னாலஜி கண்டிப்பாகத் தேவை. அதை நாமப் போய்க் கத்துக்கிட்டா என்னன்னு தான் அமெரிக்கா சென்று கமல் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு வந்துள்ளார். ஹாலிவுட் அளவுல சினிமா சம்பந்தமாக ஒரு விஷயம் வருதுன்னா அதை முதல் ஆளாக ஆர்வமுடன் கற்றுக் கொள்பவர் கமல்.

மருதநாயகம்: சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணியை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமாக மருதநாயகம் படத்தின் துவக்க விழாவை நடத்தினார். அப்போது பல கோடி செலவழித்து 20 நிமிட காட்சியை எடுத்திருந்தார். அப்புறம் படத்திற்கு எக்கச்சக்க பட்ஜெட் என்பதால் இந்த வியாபாரம் தாங்காதுன்னு அந்தப் படத்தை அப்படியே தூக்கி வைத்து விட்டார். அதன்பிறகு பிபிசி மாதிரி நிறுவனத்தோடு இணைந்து பண்ணலாம்னு நினைத்தார். அவர்களும் அதற்கு ஒத்துவரவில்லை.


கனவுப்படம்: அதன்பிறகு அவரால் அந்தப் படத்தை எடுக்க முடியாமல் போனது. மருதநாயகம் அவரது கனவுப்படம். அடுத்து அதுகுறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் யாராவது பைனான்ஸ்க்கு ரெடின்னா படத்தை எடுக்கலாம்னு சொன்னார் கமல். இப்போ ஏஐ டெக்னாலஜி வந்தபிறகு மருதநாயகத்தை நச்சென்று காட்சிகளை அமைத்து எடுக்கலாம் என்று நம்பிக்கை வந்துவிட்டது.

விக்ரம் 2, சிவகார்த்திகேயன்: முதலில் அன்பறிவு படம். அடுத்து மருதநாயகம். அதன்பிறகு விக்ரம் 2. அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்டை 3 இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே பண்ணி வைத்துள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News