வீரம் படத்தால என் சினிமா வாழ்க்கையே காலி!.. ஏமாத்தி நடிக்க வச்சாங்க.. மனம் திறந்த மனோசித்ரா..
Actress Manochithra: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மனோசித்ரா. முதன் முதலாக மலையாள சினிமா மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழில் அவள் பெயர் தமிழரசி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற மனோசித்ரா அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நீர் பறவை திரைப்படத்தில் நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வீரம் திரைப்படத்தில் அனிதா என்கின்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த மனோசித்ரா எதிர்பார்த்த அளவுக்கு முன்னணி நடிகையாக வர முடியவில்லை.
ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என முடிவு எடுத்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் நடிகை மனோ சித்ரா தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் தான் சினிமா வாழ்க்கையில் சந்தித்த சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்திருக்கின்றார்.
மனோ சித்ரா பேட்டி: சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் நடித்த போது எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. நல்ல பாராட்டும் கிடைத்தது. இதனால் நிச்சயம் அடுத்த படம் சிறப்பான படமாக அமையும் என்று எண்ணினேன். அதேபோன்றுதான் நீர் பறவை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் முதலில் முக்கிய கதாபாத்திரம் என சொல்லி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். இருந்தாலும் என்னை சமாதானம் செய்து கொண்டு நான் நடித்தேன்.
வீரம் திரைப்படம்: வீரம் திரைப்படத்திலும் இதே சம்பவம் தான் நடந்தது. வீரம் திரைப்படம் தான் நான் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. வீரம் திரைப்படத்தில் முதலில் தன்னை கமிட் செய்த போது அஜித்துக்கு ஜோடி என்று கூறினார்கள். அதாவது இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா இறந்த பிறகு அஜித்துக்கு ஜோடியாக நீங்கள் நடிப்பீர்கள் என்று கூறினார்கள்.
இதே கதையை என்னிடம் மட்டுமல்ல, அந்த திரைப்படத்தில் இரண்டாவது நடிகையாக நடித்த அபிநயா மற்றும் சில நடிகைகளிடமும் இதே கதையை தான் கூறி கமிட் செய்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் என்னிடம் இந்த படத்தின் கதையை கூறும் போது ஒரு ஹிந்தி திரைப்படத்தின் சில காட்சிகளையும் காட்டி என்னை நம்ப வைத்தார்கள்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் கழித்து தான் என்ன நடக்கின்றது என்பதே எனக்கு புரிய வந்தது. அதிகமாக மேக்கப் போடக்கூடாது, காஸ்டியூம் பிரச்சனைகளும் வந்தது. வீரம் படத்தின் செட்டில் எல்லோரும் அமர்ந்து ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாங்க. எப்போ சூட்டிங் நடக்கும் என்பதே தெரியாது. சில சமயங்களில் நான் கேரவனில் உட்கார்ந்து அழுது இருக்கின்றேன்.
அதன் பிறகு இயக்குனர் சிவாவிடம் சென்று சாரி எனக்கு இது செட் ஆகாது போல் இருக்கிறது, நான் கிளம்புகிறேன் என்றெல்லாம் கூறினேன். பின்னர் இரண்டு நாட்கள் மட்டும் என்னை வைத்து படத்தை எடுத்துவிட்டு அனுப்பி வைத்து விட்டார்கள். எனக்கு அது மிக மோசமான அனுபவமாக இருந்தது, ஆளைவிட்டால் போதும் என அங்கிருந்து கிளம்பி விட்டேன்' என்று அவர் பேசி இருக்கின்றார்.