ஒரு பாட்ட ஹிட்டாக இத்தனை வேலை செய்றாங்களா?.. சினிமா அரசியல்.. வெடித்த இசையமைப்பாளர்..!

By :  Ramya
Update: 2025-02-03 10:50 GMT

Music Composer Sam CS: தமிழ் சினிமாவில் 2019 வெளிவந்த ஓர் இரவு என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கியவர் சாம் சிஎஸ். அதனை தொடர்ந்து அம்புலி, புரியாத புதிர், விக்ரம் வேதா, அடங்கமறு, ராக்கெட் நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கைதி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார்.

தற்போது வரை 60 படங்களுக்கு மேல் பின்னணி இசையமைத்திருக்கும் சாம் சிஎஸ். பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதிலும் கவனிக்கத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இவரது இசையில் வெளிவந்த புஷ்பா 2, வணங்கான் போன்ற திரைப்படங்கள் மிகப் பிரமாதமாக இருந்தது.


பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்த நிலையிலும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசையமைப்பாளர் பட்டியலில் வர முடியாமல் இருந்து வருகின்றார். அதற்கான காரணத்தையும் சினிமாவில் இருக்கும் அரசியலையும் சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கின்றார்.

சினிமா பாலிடிக்ஸ்: ஒரு மிகப்பெரிய படம், அந்த படத்தில் என்னுடைய பாடல் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக அதாவது 4 தினங்களில் அந்த பாடல் வெளியாகின்றது என்றால் இன்னையிலிருந்து ஒரு பில்டப் கொடுக்க வேண்டும். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் இப்படி ஒரு பாடல் வரப்போகின்றது என்கின்ற பில்டப் கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து மூன்று நாள், இரண்டு நாள், அடுத்த நாள் உலகமே பாடலை பார்க்கப் போகின்றது என்கின்ற ஹைப்பை கொடுக்க வேண்டும்.

இந்த பில்டப் நம்மிடம் கிடையாது. இதுதான் பிரச்சனை.  ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் எனது பாடல்களுக்கு எதுக்குமே ஒரு ரூபாய் கூட செலவு செய்தது கிடையாது. அந்த பாடலை புரமோட் செய்வதற்கு எந்தவித பணமும் நான் செலவிட்டது கிடையாது பலரும் கூறுவார்கள் ஏன் உங்கள் பாடல் ஹிட் ஆகவில்லை என்று, அந்த சமயத்தில் அந்த வாரத்தில் வெளியான பாடல்கள் எப்படி ஹிட் ஆனது என்று எனக்கு தெரியும்.

அதற்கு அவர்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். பெரிய பெரிய நடிகர்களின் பாடல்கள் ஹிட் ஆகின்றது. ஆனால் அந்தப் பாட்டுக்கு செலவு செய்யக்கூடிய பணம்தான் எனக்கு படக்குழுவினர் கொடுக்கும் சம்பளம். இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது. ஒரு பாடலை ஹிட்டாக மாற்றுவதற்கு டேலண்ட் மட்டும் இருந்தால் பத்தாது, டேலண்ட் என்பது இருக்க வேண்டும்.

அதாவது டேலண்ட் என்பது நம்முடைய சட்டை போல, நிச்சயம் அதை போட்டு தான் ஆக வேண்டும். அதைத் தாண்டி இதில் மிகப்பெரிய லாபம் இருக்கின்றது. அதாவது தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்கு சில வேலைகளை செய்ய வேண்டும். யாரும் போன் பண்ணால் போனை எடுக்க கூடாது. எப்போது நான் போனை எடுக்கவில்லை, பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனோ அப்போது என்னுடைய பிராண்ட் அதிகமாகின்றது.


இதெல்லாம் எனக்கு கொடுத்த டிப்ஸ். எல்லாருமே என்னிடம் சொல்லும்போது நீங்கள் போனை எடுத்து விடுகிறீர்கள். ஈசியாக உங்களை தொடர்பு கொள்ள முடிகின்றது. எப்படி உங்களை பெரிய ஆளாக நம்புவார்கள் என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. ஒரு பாடலை என்னிடம் நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் உடனே நான் போட்டு கொடுத்து விட்டேன் என்றால் என்ன செய்வீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் நெருக்கமானவர்களிடம் பாடல் நன்றாக இருக்கின்றதா? என்று கேட்பீர்கள்.

உடனே அவர்கள் சொல்லும் கரெக்சனை என்னிடம் சொல்வீர்கள். ஆனால் நாளை படத்தின் ஷூட்டிங் செல்லப் போகிறீர்கள். அப்போது கடைசி நாள் வரை பாட்டை கொடுக்காமல் சூட்டிங் முதல் நாள் பாட்டை தயார் செய்து கொடுத்தால் உங்களால் எந்த கரெக்ஷன் சொல்ல முடியாது. இங்கு டேலண்ட் மட்டுமே வைத்து ஒண்ணுமே பண்ண முடியாது.

அதையும் தாண்டி நிறைய பாலிடிக்ஸ் இருக்கின்றது, லாபி இருக்கின்றது. அதை எல்லாம் புரிந்து கொண்டால் மட்டுமே இங்கு சர்வே பண்ண முடியும். எனக்கு தெரிந்த எத்தனையோ இசையமைப்பாளர்கள் இதனால் தான் முன்னுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று அந்த பேட்டியில் பேசி இருக்கின்றார்.

Tags:    

Similar News