எஸ்.டி.ஆர் ஃபேன்ஸுக்கு ஃபுல் ட்ரீட் இருக்கு!.. தக் லைப்புக்கு பின் சிம்பு நடிக்கும் புதிய படம்!..

சிம்புவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியே தெரியவந்துள்ளது.

By :  Murugan
Update: 2024-10-04 05:34 GMT

simbu

Simbu: எல்லா நடிகர்களும் தொடர்ந்து படங்களில் நடித்து தங்களின் மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்வார்கள். ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அதை மறந்துவிட்டு அடுத்து ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்வார்கள். தோல்வியை சந்தித்தாலும் துவழாமல் இருக்க வேண்டும்.

மேலும், தொடர்ந்து சினிமாவில் இயங்கி கொண்டே இருந்தால்தான் தயாரிப்பளர்கள் தேடி வருவார்கள். இல்லையேல் ரசிகர்களும் அந்த நடிகரை மறந்துவிடுவார்கள். இதிலிருந்து வேறுபடுபவர் சிம்பு. திடீரென ஒரு ஹிட் படம் கொடுப்பார். அதன்பின் சில தோல்விப்படங்களை கொடுப்பார்.

2 வருடங்கள் கழித்து வந்து மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுப்பார். அதன்பின் காணாமல் போய்விடுவார். மாநாடு பட வெற்றிக்கு பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. அது ஒரு சரித்திர கதை என்பதால் அதிக பட்ஜெட் தேவைப்பட்டது. அதோடு, ஓடிடி நிறுவனங்கள் முன்பு போல அதிக விலை கொடுப்பதை நிறுத்திவிட்டன. எனவே, கமல் பின் வாங்கினார். அதற்கு பதிலாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் சிம்புவை நடிக்க வைத்தனர்.

இந்த படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இது சிம்புவின் 48வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு பின் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிம்பு. இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை முடித்த பின் தேசிங் பெரியசாமி படத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த படத்தை அவரே தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது சிம்புவின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News