நீ இல்லன்னா இந்த படமே இல்ல!. வில்லன் நடிகரிடம் சொன்ன ரஜினி!.. அட அந்த படமா?!...
Jailer: சினிமா என்பது கூட்டு முயற்சிதான். இயக்குனர், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என எல்லோரின் கூட்டு முயற்சியில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது. அப்படி உழைத்து வெளியாகும் ஒரு திரைப்படம் வெற்றி என்றால் அதன் கிரெடிட் எல்லோருக்கும் போகும். ஆனால், தோல்வி என்றால் நடிகரையும், இயக்குனரையும்தான் கை காட்டுவார்கள்.
ரஜினி வில்லன்: பல வருடங்கள் ஆகியும் இது இன்னமும் மாறவில்லை. ஆனால், சில நடிகர்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது என்பதை புரிந்து நடந்துகொள்வார்கள். அதில் முக்கியமானவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் காட்சிகளும் சிறப்பாக வரவேண்டும் என மெனக்கெடுவார்.
ரகுவரன்: ரஜினி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். 80களில் ஜெய் சங்கர், செந்தாமரை,சத்தியராஜ் போன்றவர்கள் ரஜினிக்கு வில்லனாக நடிக்க 90களில் ரகுவரன் வந்தார். அப்படி பாட்ஷா படத்தில் ரகுவரன் செய்த அதகளம் இப்போது வரை பேசப்படுகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு வில்லன் எவ்வளவு முக்கியம் என்பதை பாட்ஷாவை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இப்போதெல்லாம் மற்ற மொழிகளிலிலுருந்து தமிழ் படங்களுக்கு வில்லனை இறக்குமதி செய்கிறார்கள். பெரும்பாலும் மும்பையிலிருந்து வில்லன் நடிகர்கள் வருகிறார்கள். ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் மலையாளத்திலிருந்து விநாயகனை கொண்டு வந்தார்கள்.
விநாயகம்: இவர் பல வருடங்களுக்கு முன்பு விஷாலின் திமிறு படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்திருக்கிறார். நிஜ வாழ்விலும் மதுபோதையில் பல இடங்களில் தகராறு செய்து போலீஸ் நிலையத்திற்கு போய்விட்டு வருவார். ஜெயிலர் படத்தில் மலையாளம் கலந்த தமிழ் பேசி மிரட்டியிருந்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய் விநாயகம் ‘ஜெய்லர் படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது ஒரே பதட்டமாகி உடம்பெல்லாம் நடுங்கிடுச்சி.. அப்போது ரஜினி சார் என்னை அமைதிப்படுத்தி ‘இந்த வர்மன் இல்லனா இந்த ஜெய்லர் இல்ல’ என சொல்லி என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்’ என சொல்லியிருக்கிறார். ஒருபக்கம், ஜெயிலர் 2 விரைவில் உருவாவுள்ளது. இதில் வில்லன் யார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.