உண்மையை சொல்லப்போனா அத பண்ணதே அஜித்தான்!.. மகிழ் திருமேனி சொன்ன சீக்ரெட்..

By :  Ramya
Update: 2025-01-15 12:40 GMT

Actor Ajith: நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.

துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. பிரேக் டவுன் என்கின்ற ஆங்கில படத்தை ரீமேக் செய்து இப்படத்தை இயக்கியிருந்தார்கள். ஆனால் படம் எடுத்து முடிப்பதற்கு நீண்ட காலம் நேரம் எடுத்துக் கொண்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினாவில் ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.


இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அப்டேட் கேட்டு கேட்டு அலுத்து போனார்கள். அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்து எடுத்து முடித்து இருக்கின்றார் மகிழ்திருமேனி. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படத்தை மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று படம் வெளியாகவில்லை.

இதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் தற்போது வரை படம் ரிலீஸ் தொடர்பான எந்த ஒரு அப்டேட் வெளியாகவில்லை. படம் ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது 'விடாமுயற்சி என்கின்ற தலைப்பை தேர்ந்தெடுத்தது அஜித்குமார் சார் தான். இந்த கதைக்கு இதை விட சிறந்த தலைப்பு நமக்கு கிடைக்காது.


ஆரம்பத்தில் ரசிகர்களுக்காக கதையில் ஒரு மாசியர் வர்ஷனை எழுதியிருந்தேன். ஆனால் அதை மறுத்து கதைக்கு தேவையானதை வைத்து நாம் பயணிப்போம் என்று கூறினார். இந்த படம் ரசிகர்களுக்கானதாக மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இப்படத்தின் கதை மூன்று காலகட்டங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

12 ஆண்டுகளுக்கு முந்தைய பகுதி, 9 ஆண்டுகளுக்கு முந்தைய பகுதி மற்றும் தற்போதைய பகுதி என மூன்று டிவிஷனாக பிரிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவுக்கு இடையே ஒரு மிகச்சிறந்த காதல் பாடல் ஒன்று இருக்கின்றது' என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Tags:    

Similar News