உடம்பில் இவ்வளவு பிரச்சனை!.. 20 கோடி சம்பளம் வேற!.. விஷாலின் கெரியர் கேள்விக்குறியாகுமா?..
நடிகர் விஷால்: அழகான நடிகர்கள்தான் தமிழ் சினிமாவில் சாதிப்பார்கள் என்கின்ற தடையெல்லாம் உடைத்து கருப்பாக இருந்தாலும் திறமை தான் முக்கியம் என்று நிரூபித்து காட்டிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் விஷால். ஆரம்பத்தில் பல ஹிட்டு படங்களை கொடுத்து வந்த இவர் இடையில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க தொடங்கினார்.
இருப்பினும் மனம் தளராமல் சினிமாவில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷாலை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். பார்ப்பதற்கே மிகவும் சோர்வாக சரியாக பேச முடியாமல் தவித்தார் விஷால்.
மைக்கை பிடித்து பேசும் போது கை கிடுகிடுவென நடுங்கியதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி அமர்ந்து பேசலாம் என்று அவரை அமரவைத்து விட்டு விஷாலுக்கு கடுமையான மலேரியா காய்ச்சல் என்றும், படத்தின் விளம்பரத்திற்காக அதையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கின்றார் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இதை பார்த்த பலரும் இப்படி ஒரு சூழலில் நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக விஷாலின் சினிமா கெரியரும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு உள்ளே நுழைந்த போதே நடிகர் விஷால் இரண்டு இடங்களில் தடுமாறி இருக்கின்றார்.
அப்போதே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே ஏதாவது ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும். அவரது நிலைமையை பார்த்து அவரை ஒரு போடியம்மில் நிற்க வைத்து பேச வைத்திருக்க வேண்டும். ஓபனாக கையில் மைக்கை கொடுத்து அவரை பேச வைத்தது அவர் கை நடுக்கம் அப்பட்டமாக தெரிந்தது. தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
என்னதான் நடிகர் விஷாலுக்கு காய்ச்சல் என்று கூறினாலும் காய்ச்சல் இருக்கும் ஒரு நபருக்கு இப்படியா? கைகள் நடுங்கும். அவருக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றது. தொடர்ந்து நடிகர் விஷால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முற்றிலும் இந்த நிகழ்ச்சியை தவிர்த்து இருக்க வேண்டியது தான் நல்லது. ஒரு நடிகருக்கு முக்கியமே அவரின் இமேஜ் தான்.
இப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இமேஜை முற்றிலும் கெடுத்துக் கொண்டார் நடிகர் விஷால். அடுத்ததாக இவர் சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த படத்திற்கு கூட நடிகர் விஷால் 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இப்படி ஒழுங்காக நின்று பேசக்கூட முடியாத இவரை வைத்து எப்படி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படம் செய்வதற்கு முன்வருவார்கள்.
ஒருவேளை அப்படி கமிட்டாகி அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று உடல்நிலை சரியில்லை என்று சென்று விட்டால் யாருக்கு நஷ்டம். நிச்சியம் இந்த நிகழ்ச்சி நடிகர் விஷாலின் கெரியருக்கு ஒரு கேள்விக்குறியாக தான் இருக்கப் போகின்றது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.