அருணாச்சலம் படத்துக்காக ‘காதல் கோட்டை’யை மிஸ் பண்ணேன்.. யாருப்பா அந்த நடிகை?

By :  ROHINI
Published On 2025-05-20 20:20 IST   |   Updated On 2025-05-20 20:20:00 IST

rajini

தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டராக மாறிய திரைப்படம் காதல் கோட்டை. ஒரு வளரும் நடிகராக இருந்த அஜித்துக்கு அந்த படம் தான் ஒரு ஆணி வேராக அமைந்தது. அந்த படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்த நடிகராக மாறினார் அஜித். அவருடைய கேரியரில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது அந்த படம் .

அதுவரை காதலன் காதலி உருகி உருகி காதலிப்பது ரொமான்ஸ் செய்வது என்பதையே காட்டி வந்த படங்களுக்கு மத்தியில் படம் முழுக்க பார்க்காமல் காதலித்து கிளைமாக்ஸில் இவர்தான் தன்னுடைய காதலன் என ஹீரோயினுக்கு தெரிந்ததும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம் இப்போது பார்க்கும் போதும் கண்களில் கண்ணீர் வடியாமல் இருக்காது. அந்த அளவுக்கு இயக்குனர் அகத்தியன் படத்தை எடுத்து சிறந்த இயக்குனர் என்ற முதல் தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயாணி நடித்திருப்பார். தேவயாணிக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் காதல் கோட்டை படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான் என ஒரு நடிகை தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ஒன்ஸ்மோர் ,பூவே உனக்காக போன்ற படங்களில் நடித்த அஞ்சு அரவிந்த்.

பூவே உனக்காக படத்தை முடித்ததும் அவருடைய தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என கேரளாவிற்கு சென்றுவிட்டாராம் அஞ்சு அரவிந்த். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் தான் ஒன்ஸ்மோர். இந்த படத்திற்கு பிறகு தான் அருணாச்சலம் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அஞ்சு அரவிந்துக்கு கிடைத்தது. அதே நேரத்தில் காதல் கோட்டை படத்தின் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

anju aravind

தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக இருக்கும் ரஜினியின் படத்தை எப்படி தவற விடுவது என்ற காரணத்தினால் ரஜினி தான் முக்கியம் என நினைத்து காதல் கோட்டை படத்தை தவறவிட்டிருக்கிறார் அஞ்சு அரவிந்த். ஆனால் இப்போது காதல் கோட்டை படத்தை பார்க்கும் பொழுது இப்படி விட்டுட்டோமே என சில நேரங்களில் நினைக்கத் தோன்றும். இருந்தாலும் எல்லாம் நம்முடைய விதிப்படிதான் நடக்கும் என நான் கடந்து விட்டேன் என கூறி இருக்கிறார் அஞ்சு அரவிந்த்.

Tags:    

Similar News