அந்த படத்துல நடிச்சுருக்கவே கூடாது!.. மனஅழுத்தம் தான் வந்துச்சு.. கழுவி ஊத்திய மீனாட்சி சௌத்ரி..
நடிகை மீனாட்சி சௌத்ரி: மாடல் அழகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. முதலில் ஹிந்தியில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். முதல் முதலாக விஜய் ஆண்டனி நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த கொலை என்கின்ற படத்தில் நடித்தார். பின்னர் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து சிங்கப்பூர் சலூன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தெலுங்கு மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த மீனாட்சி சவுத்ரி வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவர் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தார்கள். நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மோகன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி சவுத்ரி.
இப்படத்தில் பெரிய அளவு காட்சிகளில் வந்திருக்க மாட்டார். இந்த படத்தில் நடித்தது குறித்து பலரும் கிண்டல் செய்தார்கள். இந்த கதாபாத்திரம் தேவையே இல்லை என்று ட்ரோல் செய்தார்கள். இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மீனாட்சி சௌத்ரி கோட் திரைப்படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார். நான் விஜயுடன் கோட் படத்தில் நடிப்பதற்காக பல கேலி கிண்டல்களுக்கு உள்ளானேன். இணையதளத்தில் வந்த ட்ரோல் மற்றும் கேலிகளை பார்த்து மன அழுத்தத்தில் இருந்தேன்.
அதன் பிறகு எனக்கு லக்கி பாஸ்கர் திரைப்படம் தான் இந்த படத்தை பார்த்த பலரும் என்னை பாராட்டினார்கள், புகழ்ந்து பேசினார்கள். அப்போதுதான் புரிந்தது எப்போதும் நாம் நமக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று கூறி இருக்கின்றார்.
வீடியோவில் அவர் பேசியிருந்தது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் கோட் படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தவர்கள் எல்லாம் இத கொஞ்சம் பாருங்க என்று பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதள பக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.