சினிமா எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல!.. Quit பண்ண போறேன்.. நித்யா மேனன் ஷாக்கிங்!..
Actress Nithyamenon: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நித்யா மேனன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கி வருகின்றார். அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
இவர் தமிழில் முதன்முதலாக 180 என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் என்கின்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
காதலிக்க நேரமில்லை: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. இந்த படத்திற்கு இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார். படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. நேற்று முன்தினம் சென்னையில் படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நித்யா மேனன் பேட்டி: அந்த வகையில் நித்யா மேனன் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் கலா மாஸ்டர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கலகலப்பான பதிலை கொடுத்திருந்தார் நடிகை நித்யா மேனன். அப்போது உங்களுக்கு எந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த நித்யா மேனன் எனக்கு சினிமா என்றால் சுத்தமாக பிடிக்காது.
சினிமாவை விட்டு ஏதாவது செய்கிறேன் என முதலில் என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்கள் உனக்கு எது பிடிக்கின்றதோ அதையே செய் என்று சொல்லிவிட்டார்கள். அந்த அளவுக்கு போனாலும் கடவுள் மீண்டும் என்னை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தேன்.
15 வருடங்கள் நடித்து விட்டோம் என நினைத்துக் கொண்டிருந்த போதுதான் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. தேசிய விருது கிடைத்த நிலையில் நிச்சயம் நம்மை சினிமா விடாது என்று எனக்கு புரிந்தது என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகும் அளவுக்கு என்ன காரணம் இருக்கின்றது. நீங்கள் நல்ல நடிகை தானே என்று கலா மாஸ்டர் கேட்க சிறுவயதில் இருந்தே கேமரா முன்னாடி நிற்கவே எனக்கு பிடிக்காது. சினிமா நடிகையாக மாறிய காரணத்தால் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்கின்றேன். இயல்பான என் வாழ்க்கை எனக்கு கிடைப்பதில்லை. போட்டோகிராபர் போல வாழ ஆசைப்படுகின்றேன்' என்று அவர் கூறியிருந்தார். இந்த போட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.