சினிமாவே வேண்டாம்னு ஓட வைப்பது விமர்சனமா?!.. புளூசட்டையை பொளந்த சந்தானம்!...

By :  MURUGAN
Update: 2025-05-15 07:44 GMT

முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்பது நியாயமாக இருந்தது. விமர்சனம் பற்றி ஒருமுறை கருத்து சொன்ன நடிகர் திலகம் சிவாஜி ‘ஒரு காட்சி சரியாக எடுக்கப்படவில்லை என்று சொன்னால் அது விமர்சனம். நாமும் அதிலிருந்து கற்றுக்கொண்டு நம்மை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கழுத்தை நெறிப்பது போல கருத்து சொன்னால் அது விமர்சனம் இல்லை’ என சொல்லி இருந்தார்.

விமர்சனம் என்பது படத்தில் இருக்கும் குறைகளை யாரையும் காயப்படுத்தாமல் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் புதுப்படங்கள் வெளியானால் அந்த படத்தில் விகடன் வார இதழ் எப்படி விமர்சனம் செய்கிறார்கள்?. எவ்வளவு மதிப்பெண் கொடுக்கிறார்கள் என பார்ப்பார்கள். அதிக மதிப்பெண் கொடுத்தால் அதையே போஸ்டரில் போட்டு விளம்பரத்திற்கு பயன்படுத்துவார்கள்.

ஆனால், யுடியூப் சேனல்களில் பலரும் புதிய படங்களை விமர்சனம் செய்ய துவங்கிய பின் விமர்சனங்களின் தரமே தாழ்ந்துவிட்டது. ஏனெனில் எல்லோருமே நியாயமான விமர்சனத்தை செய்வது இல்லை. காசு வாங்கிக்கொண்டு மொக்கை படத்தையும் நன்றாக இருப்பதாக கூட சிலர் வீடியோ விமர்சனம் போடுகிறார்கள்.


இதில் புளூசட்டமாறன் வேற ரகம். இவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட கலைப்படங்கள் மட்டுமே பிடிக்கும். ஆனால், 95 சதவீதம் மசாலா படங்கள்தான் வெளியாகிறது. ஏனெனில், மசாலா படங்கள்தான் வசூலை அள்ளி எல்லோருக்கும் லாபம் கொடுக்கும். ஆனால், மசாலா படங்களை மாறன் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார். இவரின் யுடியூப் சேனலை சில லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

எனவே, படங்களை திட்டுவதையே விமர்சனமாக பேசி கல்லா கட்டி வருகிறார் மாறன். இவர் மீது பல இயக்குனர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்களும் நடந்தது. விஜய், ரஜினி, அஜித் என யாருடைய படங்களாக இருந்தாலும் சகட்டுமேனிக்கு நக்கலடித்து விமர்சனம் செய்து புளூசட்டமாறனின் ஸ்டைல். நடிகர்களின் தோற்றம் பற்றியும் விமர்சனம் செய்வார். வலிமை படம் வெளியானபோது அப்படத்தில் அஜித் ‘பஜன்லால் சேட்’ போல இருக்கிறார் என நக்கலடித்தவர் இவர்.

இந்நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம் ‘ஒரு படத்தின் விமர்சனம் என்பது அப்படத்திற்கு துடுப்பு மாதிரி இருக்க வேண்டுமே தவிர தடுப்பாக இருக்கக் கூடாது. துடுப்பு போல படத்தை அழைத்து போக வேண்டுமே தவிர படத்தை தடுக்கக் கூடாது. ஒரு விமர்னம் ஒரு திரைப்படத்தையும், அதை உருவாக்கியவர்களையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர அவங்களை மன அழுத்தத்தில் தள்ளி இனிமே சினிமாவே வேண்டாம்னு போற விஷயமாக இருக்கக் கூடாது’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News