ஃபேன்ஸ் நல்லா படிங்க!. சண்டை போடாதீங்க!. துபாயிலிருந்து வீடியோ போட்ட அஜித்!...

By :  Murugan
Update: 2025-01-11 17:17 GMT

Ajithkumar: நடிகர் அஜித் இப்போது துபாயில் இருக்கிறார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை நடித்து கொடுத்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கலந்துகொள்ள போனார். கடந்த பல நாட்களாகவே அஜித் இந்த கார் ரேஸுக்காக துபாயிலேயே இருந்தார்.

கார் ரேஸ்: பலமுறை பயிற்சிகளும் எடுத்தார். அப்போது ஒருமுறை அவரின் கார் விபத்திலும் சிக்கியது. ஆனாலும் அடுத்த நாளே கார் ரேஸுக்கு வந்துவிட்டார். அஜித்தின் டீமுக்கு அவர்தான் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில்தான் அஜித் கார் ரேஸிலிருந்து விலகுகிறார் என செய்திகள் வெளியானது.

அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் இருப்பேன். அதுவரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என சொன்ன அஜித் எப்படி ரேஸிலிருந்து விலகினார் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஒரு ரேஸில் மட்டுமே அவர் விளையாடவில்லை என அதன்பின் சொன்னார்கள்.


அஜித் வீடியோ: இந்நிலையில்தான், அஜித் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். கடந்த 20 வருடங்களுக்கும் மேல் அஜித் எந்த மீடியாவையும் சந்திக்கவில்லை. யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை. அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் அவர் கலந்துகொள்வது இல்லை. இந்த நிலையில்தான் அவர் பேசியுள்ள வீடியோ அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அந்த வீடியோவில் பேசியுள்ள அஜித் ‘நான் ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் இருக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன். நல்லா படிங்க. குடும்பத்தை பாருங்க.. நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க..பிடிச்ச விஷயங்களை செய்யுங்க.. கடுமையான உழைங்க.. உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யும்போது தோல்வியை சந்திச்சா மனம் தளராதீங்க.. கார் ரேஸும் சினிமா மாதிரி டீம் வொர்க்தான். ஒரு காருக்கு 3 டிரைவர்ஸ் இருப்பாங்க. டைமிங் கரெக்டா மெயிண்டெய்ன் பண்ணாத்தான் ரிசல்ட் வரும். லவ் யூ ஆல்.. சண்டை போடாதீங்க.. குடும்பத்தை பாருங்க.. சந்தோஷமா இருங்க’ என அறிவுரை கூறியிருக்கிறார். அஜித் பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் பேசியுள்ள வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/DEsH9zHyPkK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Tags:    

Similar News